இவரை அப்படியே விட்டா இந்திய அணியை முற்றிலுமாக அழித்து விடுவார் – எச்சரித்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் மிகச் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளிலும் 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அடுத்தடுத்து சதம் அடித்த அவரை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.

indvsaus

- Advertisement -

எப்போதுமே இந்திய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடும் ஸ்டீவன் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி 7 போட்டிகளில் 4 போட்டிகளில் சதம் மூன்று அரை சதமும் அடித்து இருக்கிறார். இந்நிலையில் இப்படியே அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு வந்தால் அவரை கட்டுப்படுத்துவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரும் சிரமம் ஆகிவிடும் என்று தெரிவித்து இருக்கிறார் கௌதம் காம்பீர்.

மேலும், விராட் கோலியும் ஸ்டீவன் ஸ்மித்தையும் ஒப்பிட்டுப் பேசி இருவரில் யார் மிகச்சிறந்த ஒரு நாள் பேட்ஸ்மேன் என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்…

smith 1

ஸ்டீவன் ஸ்மித் அடித்த அடுத்தடுத்த இரண்டு அரை சதங்கள் மிகச் சிறப்பாக இருந்தது விராட் கோலியை போன்று ஒரு வீரராக மாறுவதற்கு வெகு தூரத்தில் இல்லை. நாம் விராட் கோலியை தலைசிறந்த ஒருநாள் வீரர் என்கிறோம். ஸ்டீவன் ஸ்மித் அவருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 60 பந்துகளில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த அளவிற்கு அவர் தற்போது சிறப்பான பேட்டிங் பார்ம்மில் விளையாடி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார்.

- Advertisement -

விராட் கோலியும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் ஸ்டீபன் ஸ்மித் தனது ஆதிக்கத்தை காட்டிவிட்டார். இப்படி ஸ்டீவன் ஸ்மித் ஆடுவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பார். மூன்றாவது போட்டியில் கூட அவர் சதம் அடிக்கலாம். அவரது விக்கெட் எடுப்பதற்கு நாம் வழியை கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும் என்று தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

Smith

மேலும் ஸ்மித் தற்போது இருக்கும் அதே பார்மை தொடர்ந்தார் என்றால் அது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு சிக்கலை கொடுக்கும். அதுமட்டுமின்றி டெஸ்ட் தொடரிலும் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாக மாறிவிடும் என்று இந்திய பவுலர்களை கம்பீர் எச்சரித்துள்ளார்.

Advertisement