ஐ.சி.சி எந்த கணக்குல இந்த முடிவை எடுக்குறாங்கனு எனக்கு தெரியல. இது முற்றிலும் தவறானது – கம்பீர் காட்டம்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கடந்த 42 மாதங்களாக அதாவது கிட்டத்தட்ட 3 வருடங்கள் மற்றும் 6 மாதம் வரை தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத அணியாக நம்பர் 1 அணி என்ற அந்தஸ்தோடு கம்பீரமாக வீறுநடை போட்டுக்கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து வெளிநாடுகளிலும் வெற்றிகளை பெற்றுவருகிறது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான ஐ.சி.சி யின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்தது. இந்த புள்ளி விவரம் குறித்த விவரம் வெளியானதும் அதிகளவு சர்ச்சையும் ஏற்பட்டது. ஏனெனில் கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டு இந்திய அணி பின்னுக்கு தள்ளப்பட்டது என்று கேள்விகள் எழுந்தன.

மேலும் அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றப்பட்டு, இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்த புள்ளி விவரம் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது :

Gambhir

எனக்கு இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் நான் இந்த புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தரவரிசை எல்லாம் எப்போதும் நம்புவது கிடையாது. அதுவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுபோன்ற நடைமுறை மோசமானது. சொந்த மண்ணில் இல்லாமல் வெளிநாடுகளில் பெரும் வெற்றிகளுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக புள்ளிகளை தான் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் இவர்கள் அப்படி புள்ளிகளை கொடுப்பதில்லை. உள்நாட்டிலும் சரி உள்நாட்டிலும் சரி ஒரே மாதிரி புள்ளிகளை கொடுக்கிறார்கள். இந்த விதிமுறை அபத்தமானது ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 100 சதவீத சவாலான அணியாக இந்தியா உள்ளது. மற்ற அணிகளை ஒப்பீடு செய்கையில் டெஸ்ட் க்ரிக்கெடிலன் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

ind-2

அது மட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அவர்களது மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதேபோன்று மற்ற அணிகளில் செய்ய முடியவில்லை. இதனால் வெளிநாடுகளில் பெரும் வெற்றியை பொறுத்து அதிக புள்ளிகளை கொடுக்க வேண்டும் ஆனால் இதையெல்லாம் எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்று தெரியாமல் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது என்று காட்டமாக கூறினார்.

ஏற்கனவே டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகும் போது இந்திய அணியின் பின்னடைவிற்கு என்ன காரணம் உங்களது புள்ளிவிவரங்களை விரிவாகக் கூறுங்கள் என்று ரசிகர்கள் ஐசிசி இடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. அதற்கும் ஐ.சி.சி சமாளிக்கும் விதமாக பதிலையும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ind 1

தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி நிச்சயம் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மீண்டும் எப்போது போட்டிகள் துவங்கும் என்பதும், போட்டி அட்டவணைகளில் ஏதேனும் மாற்றம் இருக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement