சென்னை 2 ஆவது டெஸ்ட் : இந்திய அணியில் இவர் இடம்பெறாதது நல்லதுதான் – தெளிவாக கூறிய கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று 13-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது. துவக்க வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 161 ரன்களையும், ரகானே 67 ரன்களும் குவித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 33 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

rohith

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி நதீம், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்படாததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து இருந்த வேளையில் இந்த முடிவு சரியானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : பும்ராவுக்கு ஓய்வு அளித்தது என்பது சரியான முடிவுதான். ஏனெனில் அடுத்த போட்டி பிங்க் பாலில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது.

Bumrah

அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஒரு நல்ல முடிவு மேலும் சென்னையில் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அம்சம் ஏதுமில்லை. முழுக்க முழுக்க அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் படி உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா ஏகப்பட்ட ஓவர்கள் வீசியுள்ளார். இதனால் இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது சரியான ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

Bumrah

மேலும் முக்கியமான போட்டிகளுக்கு பும்ரா கட்டாயம் அவசியம் அதன்படி அடுத்த போட்டிக்கு அவர் தேவை எனவே பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது என்னை பொருத்தவரை சரியான முடிவுதான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement