2023 உ.கோ பிளேயிங் அணியில் அவருக்கு பதிலா கேஎல் ராகுலை எடுத்தா நாம தோற்பது உறுதி – ரோஹித்தை எச்சரித்த கம்பீர்

Gautam gambhir 7
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் எப்போதுமே கில்லியாக செயல்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

அந்த நிலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்க்கு பதிலாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்களில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு பெற்று அசத்திய கேஎல் ராகுல் தேர்வாகியுள்ளார். இருப்பினும் ஐபிஎல் 2023 தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் இதுவரை எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் களமிறங்குவது சரியான முடிவல்ல என சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

கம்பீர் எதிர்ப்பு:
மறுபுறம் காயமடைந்த அவருக்கு பதிலாக ஆசிய கோப்பையின் லீக் சுற்றில் வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 66/4 என ஆரம்பத்திலேயே சரிந்த போது தரமான பவுலர்களை எதிர்கொண்டு 82 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார். குறிப்பாக இரட்டை சதம்டித்தது முதல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்தது வரை துவக்க வீரராக செயல்பட்ட அவர் தற்போது தம்மால் மிடில் ஆர்டரிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

இருப்பினும் குணமடைந்து விட்டதால் அவருக்கு பதிலாக ராகுல் தான் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இஷானுக்கு பதில் ராகுல் விளையாடினால் அது மிகப்பெரிய தவறாக இருக்கும் என்று எச்சரிக்கும் கௌதம் கம்பீர் அதற்கான காரணத்தை விளக்கி பேசியது பின்வருமாறு. “இஷான் கிஸானுக்கு பதிலாக கேஎல் ராகுல் விளையாடினால் இந்தியாவின் மிகப்பெரிய தவறாக இருக்கும்”

- Advertisement -

“இங்கு பிரச்சனை என்னவெனில் உலகக் கோப்பைக்கு நீங்கள் செல்லும்போது ஒரு வீரரின் பெயரை பார்க்காமல் அவரின் ஃபார்மை பார்த்து மதிப்பிட வேண்டும். குறிப்பாக யார் உங்களுக்கு அசத்தி உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்று நினைப்பவரை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் இசான் கிசான் தம்மால் முடித்த அனைத்தையும் செய்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா தவர வேற ஏதாவது டீமுக்கு இவர் ஆடுனா கண்டிப்பா எல்லா மேட்ச்லயும் பிளேயிங் லெவன்ல ஆடுவாரு – ஹர்பஜன் கருத்து

அவர் கூறுவது போல ஏற்கனவே துவக்க வீரராக தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தடுமாறிய ராகுல் அழுத்தமான மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது அசத்துவாரா என்பது சந்தேகமாகும். மேலும் தற்போது அவருடைய ஃபார்ம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரியாததால் இசான் கிசான் விளையாடுவதே சரியான முடிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement