இந்த மாதிரி ஒரு பிட்ச் இருக்குதுன்னு தெரிஞ்சா ஐ.பி.எல் ஆடவே அவரு வரமாட்டாரு – கம்பீர் விமர்சனம்

Gautam-Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது எளிதாக இந்த இலக்கை துரத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

ஆனால் மைதானத்தின் மோசமான தன்மை காரணமாக இந்திய அணியும் கடைசி ஓவர் வரை சென்று தான் போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் மோசமான ஆடுகளத்தை கொண்டுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இதுபோன்ற சர்வதேச போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் உள்ள ஆடுகளங்களை சரியான தன்மையுடையதாக வடிவமைக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆடுகளம் இரண்டு அணியின் பேட்ஸ்மன்களுக்குமே கடினமான சூழ்நிலையை உருவாக்கியது.

Quinton De Kock 140

அதோடு ஒரு டி20 போட்டி நடத்தப்படும் அளவிற்கு இந்த ஆடுகளம் இன்னும் முழுமையாக தயார்படுத்தப்படவில்லை என்று தான் நினைப்பதாக மைதானத்தின் மீதான விமர்சனத்தை ஹார்டிக் பாண்டியா முன் வைத்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து லக்னோ மைதானத்தின் தன்மை குறித்து ஹிந்தி கமெண்டரியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இது போன்ற ஒரு மைதானத்தை பார்த்தால் நிச்சயம் தென்னாப்பிரிக்க வீரரான குவின்டன் டி காக் ஐபிஎல் தொடரிலேயே பங்கேற்று விளையாட மாட்டார் என்று வெளிப்படையாக இந்த மைதானத்தின் தன்மை குறித்து கலாய்த்தார். அதே வேளையில் கமெண்டரியில் அவருடன் அருகில் இருந்த முகமது கைஃப் : அதெல்லாம் கிடையாது அவர் நிச்சயம் விளையாட வருவார் என்று கூறினார்.

இதையும் படிங்க : அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற நட்சத்திர தமிழக வீரர் – அடுத்த பயணத்துடன் ரசிகர்களுக்கு நன்றி

இந்தியாவில் பொதுவாகவே சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என்றாலும் இந்த லக்னோ மைதானத்தின் தன்மை முற்றிலும் மோசமாக இருந்ததாலும் மேலும் ரன்களை குவிக்கவே இரு அணிகளும் கடினப்பட்டதாலும் இந்த மைதானத்தின் தன்மை குறித்த விமர்சனம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement