இன்னும் 1990லயே இருக்கும் நீங்க சுமார் டீம் தான்.. பாகிஸ்தானின் 3 குறைகளை புட்டுவைத்த கம்பீர்

gautam gambhir 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 74, அப்துல்லா சபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு இப்ராஹிம் ஜாட்ரான் 87, ரஹ்மத் ஷா 77*, ரகமனுல்லா குர்பாஸ் 65, கேப்டன் ஷாஹிதி 48* ஆகிய டாப் 4 பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவித்து 49 ஓவரில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
மறுபுறம் பேட்டிங்கில் ஓரளவு அசத்திய பாகிஸ்தான் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் படுமோசமாக செயல்பட்டு அவமான தோல்வியை சந்தித்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் அணுகுமுறையை மாற்றி விளையாடும் நிலையில் பாகிஸ்தான் 90களில் இருந்த பழைய அணுகுமுறையை பின்பற்றி விளையாடி மிகவும் சுமாரான அணியாக செயல்படுவதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணியில் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் ஆகிய 3 துறைகளிலும் உள்ள குறைகளை வெளிப்படையாக கூறிய அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானின் சுமாரான ஃபீல்டிங் பற்றி ஆசிய கோப்பையிலேயே நாம் விவாதித்தோம். பொதுவாக நீங்கள் பேட்டிங் அல்லது பவுலிங் துறையில் ஏதோ ஒரு நாளில் சுமாராக செயல்படலாம். ஆனால் ஃபீல்டிங் துறையில் எப்போதுமே சொதப்பக் கூடாது”

- Advertisement -

“இருப்பினும் ஆசியக் கோப்பையிலிருந்தே பாகிஸ்தான் இந்த துறையில் இன்னும் முன்னேறாமல் இருக்கிறார்கள். அதனால் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மிகவும் சுமாரான ஃபீல்டிங்கை கொண்டுள்ள அணி என்று நான் கருதுகிறேன். மேலும் அவர்கள் ஸ்பின் பவுலிங்கில் தடுமாறுகின்றனர். இந்த மைதானம் பனி இல்லாமல் சுழலுக்கு சாதகமாக இருந்த போதிலும் பாகிஸ்தானின் 3 ஸ்பின்னர்களில் ஒருவர் கூட 1 விக்கெட்டை எடுக்கவில்லை. இது 2வது குறையாகும்”

இதையும் படிங்க: இது பாகிஸ்தான் டீமே இல்ல.. நேரலையில் கண்ணீரால் கலங்கிய வக்கார் யூனிஸ்.. வீரர்களை விளாசல்

“பாகிஸ்தானின் பேட்டிங் 3வது குறையாகும். அவர்களுடைய டாப் 5 பேட்ஸ்மேன்களும் ஒரே மாதிரியாக விளையாடுகின்றனர். குறிப்பாக இப்திகார் அகமது தவிர்த்து வேறு யாரும் அதிரடியாக விளையாட முயற்சிப்பதில்லை. அதை விட பிளாட்டான பிட்ச், 2 புதிய பந்துகள், உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் என கிரிக்கெட் 1990 அல்லது 2011 வருடங்களில் இருந்ததைப் போல் அல்லாமல் தற்போது நோக்கி நகர்ந்துள்ளது. அதற்கேற்றார் போல் நீங்களும் அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement