ஐசிசி ரேங்கிங்ஸில் நம்பர் ஒன் வந்து என்ன பயன்.. முடிஞ்சா அங்க ஆஸியை ஜெயிச்சு காட்டுங்க – இந்திய அணிக்கு கம்பீர் மறைமுக சவால்

Gautam gambhir 7.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் ஆசிய கோப்பை வெற்றி நடையை சொந்த மண்ணிலும் தொடரும் இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் வெற்றி வாகை சூடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதை விட இந்த வெற்றியால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை முந்திய இந்தியா உலகின் நம்பர் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

அத்துடன் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே சமயத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை இந்தியா சமன் செய்தது.

- Advertisement -

கம்பீர் சவால்:
மேலும் 2023 உலகக்கோப்பைக்கு முன் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே சமயத்தில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தையும் இந்தியா படைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிப்பதில் எந்த பயனுமில்லை என்று தெரிவிக்கும் கௌதம் கம்பீர் முடிந்தால் 5 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2023 உலகக் கோப்பையை வென்று காட்டுங்கள் என இந்திய அணிக்கு மறைமுகமான சவாலை விடுத்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அதற்கு நீங்கள் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். 2007 டி20 உலக கோப்பையில் அவர்களை நாங்கள் செமி ஃபைனலில் தோற்கடித்தோம். அதே போல 2011 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை நாங்கள் காலிறுதியில் வீழ்த்தினோம்”

- Advertisement -

“ஏனெனில் ஐசிசி தொடர்களில் எப்போதுமே ஆஸ்திரேலியா வலுவான அணியாகும். அதனால் ஐசிசி தரவரிசையை எடுத்து விடுங்கள். இந்த தரவரிசை ஒரு பொருட்டே கிடையாது. நீங்கள் தரவரிசையில் எங்கிருந்தாலும் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் அதிக தன்னம்பிக்கை கொண்ட வீரர்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினமாகும். அவர்கள் மிகப்பெரிய அழுத்தமான தருணங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்”

இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 : இந்திய மண்ணில் 1992 போல வரலாறு படைக்குமா.. பாகிஸ்தான் அணியின் முழுமையான அலசல்

“அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை அந்த 2 உலகக் கோப்பைகளில் நாக் அவுட் சுற்றில் நாங்கள் தோற்கடித்ததாலேயே வென்றோம். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் 2015 உலகக் கோப்பையில் தோற்றோம். எனவே நீங்கள் உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது முக்கியமாகும். குறிப்பாக இம்முறை அவர்களை முதல் போட்டியில் சந்திப்பதால் அதில் ஆஸ்திரேலியாவை நாம் தோற்படிப்பது மிகமிக முக்கியம் என்று கருதுகிறேன்” என கூறினார்.

Advertisement