- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் 74, ரோஹித் 121 அடிச்சு என்ன பயன்? இந்தியா அதை செய்யாத வரை எனக்கு மகிழ்ச்சியில்லை.. கம்பீர் ஓப்பன்டாக்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடியது. அதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் வென்ற இந்தியா ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியைத் தவிர்த்தது.

அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 74* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. மேலும் 2027 உலகக்கோப்பையில் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அடுத்து நடைபெற்ற டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

- Advertisement -

என்ன பயன்:

இந்நிலையில் சிட்னி ஒருநாள் போட்டியில் விராட், ரோஹித் பெரிய ரன்கள் குவித்தும் இந்தியா தோற்றதால் எந்த பயனுமில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் டி20 தொடரில் இந்தியா வென்றது தமக்கு மகிழ்ச்சியளித்ததாக கம்பீர் கூறியுள்ளார். அந்த வகையில் சொந்த சாதனைகளைக் காட்டிலும் அணியின் வெற்றியே முக்கியம் என்ற கண்ணோட்டத்துடன் தாம் பயிற்சியாளராக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அது (விராட், ரோஹித் ரன்கள்) எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. வெற்றி என்பது தனி நபர்களின் செயல்திறனால் வருவதல்ல என்று நான் எப்போதும் நம்புபவன். ஆம் தனிநபர் ஆட்டத்துக்காக நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால் நாங்கள் ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தோம். அதுவே அடி கோடாகும்”

- Advertisement -

கம்பீர் கருத்து:

“ஒரு பயிற்சியாளராக நான் எப்போதும் தோல்வியைக் கொண்டாட மாட்டேன். ஒரு வீரராக நான் தனிநபர்களை பாராட்டுவேன். ஆனால் ஒரு பயிற்சியாளராக இருதரப்பு தொடரில் தோல்வியை சந்தித்த பின் நாம் தனிநபர்களின் ஆட்டத்தைக் கொண்டாடக்கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் நாம் நாட்டுக்காக விளையாடுகிறோம். டி20 தொடரில் நாங்கள் வெற்றி பெற்றதால் அதனுடைய உணர்வு வித்தியாசமானது”

இதையும் படிங்க: ரியான் பராக் இல்ல.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு போட்டியில் இருக்கும் – 2 பேர் இவங்க தானாம்

“வெற்றி பெற்ற போதிலும் எங்களுக்கு நிறைய நேர்மறையான விஷயங்கள், பாடங்கள் கிடைத்தன. இன்னும் 3 மாதத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. அதை முன்னிட்டு பார்க்கையில் தற்போது நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்த இருதரப்பு தொடர்கள் முக்கியமில்லை. உலகக்கோப்பை வரும் போது நாங்கள் தயாராக இருப்போம் என்று நம்புகிறேன். அதுவே இலங்கையில் நான் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து என்னுடைய எண்ணமாக இருந்து வருகிறது” என்று கூறினார்.

- Advertisement -