ரோஹித் இல்ல.. உலக கோப்பையில் அவர் தான் அதிக சதங்கள் அடிப்பாரு.. கம்பீர் அதிரடி

Gautam gambhir 9
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே இந்த தொடரில் களமிறங்கும் டாப் 10 அணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் கோப்பையை வெல்வதற்கு அதிக போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வெளிநாட்டு அணிகளுக்கு சவாலை கொடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தயாராகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் நிறைய தரமான பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பெரிய ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடுவார்கள். அந்த வகையில் இம்முறை சொந்த மண்ணில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில் ஆகியோர் பெரிய ரன்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கம்பீர் கணிப்பு:
இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா பெரிய ரன்கள் குவிப்பார் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் ரோகித் மற்றும் விராட் கோலி போன்ற இதர வீரர்களை காட்டிலும் நல்ல டெக்னிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் குறைந்தது 3 – 4 சதங்கள் அடிப்பார் என்று கணித்துள்ள அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ரோஹித் சர்மாவிடம் சிறப்பான திறமை இருக்கிறது. எனவே சொந்த மண்ணில் இந்த உலகக்கோப்பை நடைபெறும் நிலையில் இந்தியாவில் ரோகித் சர்மாவின் சாதனைகள் என்ன என்பதை நாம் அறிவோம். அவர் 3 இரட்டை சதங்களை அடித்துள்ளார். அதன் காரணமாக அவர் இந்தியாவுக்காக கோப்பையை வெல்வதற்கு மிகுந்த பசியுடன் விளையாடுவார் என்று உறுதியாக சொல்ல முடியும்”

- Advertisement -

“அதே போல பாபர் அசாமிடம் மிகச் சிறப்பான பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. எனவே அவர் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்காக குறைந்தபட்சம் 3 அல்லது 4 சதங்கள் அடிப்பார் என்று நினைக்கிறேன்” என கூறினார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், வார்னர் போன்றவர்களை விட வேறுபட்ட திறமையை கொண்டிருக்கும் பாபர் அசாம் இந்த உலகக்கோப்பையில் நெருப்பாக பேட்டிங் செய்வார் என்று கடந்த வாரமே கம்பீர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 2023 உலக கோப்பையுடன் 33 வயதிலேயே ஓய்வா? ஏமாற்றமான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஜோஸ் பட்லர்

அந்த சூழ்நிலையில் தம்முடைய கேரியரில் முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாடும் பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியிலேயே 80 ரன்கள் அடித்து அசத்தினார். எனவே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் முதன்மையான போட்டிகளிலும் அசத்துவார் என்றே சொல்லலாம்.

Advertisement