தம்முடன் விளையாடியதிலேயே இவங்க தான் பெஸ்ட்.. தனது ஆல் டைம் கனவு ஐபிஎல் அணியை வெளியிட்ட கம்பீர்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தம்முடைய ஆல் டைம் கனவு ஐபிஎல் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா 10 வருடங்களுக்கு சாம்பியன் வெல்ல உதவினார். அதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர் ஐபிஎல் தொடரில் தாம் விளையாடிய வீரர்களில் சிறந்த 11 பேர் கொண்ட கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.

கொல்கத்தா அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டங்களையும் வென்றதால் அவர் பெரும்பாலும் அந்த அணியில் விளையாடிய வீரர்களையே தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் முதலில் கௌதம் கம்பீர் தம்மையே துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ராபின் உத்தப்பாவை தம்முடைய ஓப்பனிங் பார்ட்னராகவும் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

கெளதம் கம்பீர் ஐபிஎல் லெவன்:

2014 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற உத்தப்பா கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் அவரை தேர்ந்தெடுத்துள்ள கம்பீர் 3வது இடத்தில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றழைக்கப்படும் தற்போதைய கேப்டன் சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து கம்பீரின் அணியில் 4வது இடத்தில் வரலாற்றின் மகத்தான ஆல் ரவுண்டராக கருதப்படும் தென்னாப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் இடம் பிடித்துள்ளார்.

மிடில் ஆர்டரில் யூசுப் பதான், ஆண்ட்ரே ஆகிய 2 காட்டடி பேட்ஸ்மேன்களை கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார். ஆண்ட்ரே ரசல் இன்று வரை கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். அதே போல கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா கோப்பையை வெல்ல யூசுப் பதானும் முக்கிய பங்காற்றியவர். அதைத் தொடர்ந்து பியூஸ் சாவ்லா, டேனியல் வெட்டோரி, சுனில் நரேன், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை கம்பீர் தம்முடைய அணியின் ஆல் ரவுண்டர் ஸ்பின்னர்களாக தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

சிறந்த வீரர்கள்:

இதில் 2014 ஐபிஎல் ஃபைனலில் சிக்ஸர் அடித்த பியூஸ் சாவ்லா கொல்கத்தா 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர். சுனில் நரேன் 2012, 2014 மட்டுமின்றி 2024 ஐபிஎல் கோப்பையையும் கொல்கத்தா வெல்ல முக்கிய பங்காற்றினார். இறுதியில் மோர்னே மோர்கெல் வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். மொத்தத்தில் கொல்கத்தா அணியில் விளையாடிய பெரும்பாலான வீரர்களை கௌதம் கம்பீர் தம்முடைய கனவு அணியில் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஹாட் ஸ்டார் எல்லாம் கிடையாது.. இந்தியா வங்கதேச டெஸ்ட் தொடரை எந்த ஆப்பில் பார்க்கலாம்? – விவரம் இதோ

இவர்கள் அனைவருமே ஐபிஎல் வரலாற்றில் தன்னுடன் விளையாடிய மிகச்சிறந்த வீரர்கள் என்று கௌதம் கம்பீர் பாராட்டும் தெரிவித்துள்ளார். கெளதம் கம்பீர் தேர்ந்தெடுத்த அணி: கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா, சூரியகுமார் யாதவ், ஜேக் கேலிஸ், யூசுப் பதான், ஆண்ட்ரே ரசல், ஷாகிப் அல் ஹஸன், பியூஸ் சாவ்லா, சுனில் நரேன், டேனியல் வெட்டோரி, மோர்னே மோர்கல்

Advertisement