ஹாட் ஸ்டார் எல்லாம் கிடையாது.. இந்தியா வங்கதேச டெஸ்ட் தொடரை எந்த ஆப்பில் பார்க்கலாம்? – விவரம் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரிலும் நடைபெற இருக்கிறது.

இந்தியா பங்களாதேஷ் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் :

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் வங்கதேச அணியின் வீரர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி வெற்றியுடன் திரும்பியுள்ள வங்கதேச அணியானது இம்முறை இந்திய அணியும் வீழ்த்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இதன் காரணமாக இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். ஏற்கனவே இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பிலும் நாம் பார்த்து பழகி இருப்போம்.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த தொடரை அவர்கள் ஒளிபரப்பவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு முன்பே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் உரிமைகளை ஜியோ சினிமா நிறுவனம் கைப்பற்றி விட்டது.

இதையும் படிங்க : 132 ரன்ஸ்.. வங்கதேச தொடரில் ரஹானேவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உடைக்கப் போகும் ஜெய்ஸ்வால்

அதன் காரணமாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம். அதேவேளையில் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவோர் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement