சுப்மன் கில் சரிப்பட்டு வரமாட்டார், டி20 கிரிக்கெட்டில் மிரட்டும் அவருக்கு சான்ஸ் கொடுங்க – கம்பீர் ஓப்பன் டாக்

shubman gill gautam gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் கடுமையாக போராடி சமன் செய்துள்ளது. இதை தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. முன்னதாக இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் சுழலுக்கு சாதகமாக மைதானங்கள் இருந்த நிலையில் சுப்மன் கில், இஷான் கிசான், ராகுல் திரிபாதி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

Shubman Gill 1

- Advertisement -

குறிப்பாக சமீப காலங்களில் ஒருநாள் தொடரில் அதிரடியாக செயல்பட்டு இரட்டை சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் 2 போட்டிகளிலும் சுழல் பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் குருட்டுத்தனமான ஷாட்டை அடித்து அவுட்டானார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019லேயே அறிமுகமாகி தடுமாறிய அவர் 2022 முதல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சதங்களை அடித்து கால் தடம் பதித்துள்ளார். ஆனால் ஆரம்பம் முதலே டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்களை குவித்த காரணத்தால் ஒரு வழியாக கடந்த நவம்பரில் அறிமுகமானார்.

கம்பீர் கோரிக்கை:
இருப்பினும் பெரிய ரன்களை குவிக்கும் அவரால் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க முடியாமல் தடுமாறுவது ஆரம்பம் முதலே முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமெனில் இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 76 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 46 ரன்கள் ஒரே போட்டியில் எடுக்கப்பட்டதாகும். அதுவும் 120+ என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கப்பட்டதாகும். இந்நிலையில் சுப்மன் கில் இயற்கையாகவே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பொருந்தக்கூடியவர் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பிரிதிவி ஷா ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் இயற்கையாகவே டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்டக் கூடியவர் என்று கூறியுள்ளார்.

Prithivi Shaw Sehwag

அதனால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக அவருக்கு சுப்மன் கில் இடத்தில் வாய்ப்பு கொடுத்து வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளும் கெளதம் கம்பீர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக சர்வதேச அளவில் இன்னும் இதுவரை அவர் கால் தடம் பதிக்கவில்லை. சில நேரங்களில் நீங்கள் வித்தியாசமாக விளையாட வேண்டும். சுப்மன் கில் விளையாடும் ஆட்டத்திற்கு 50 ஓவர் போட்டிகள் தான் பொருந்தும். மறுபுறம் பிரிதிவி ஷா போன்றவருடைய அடிப்படை ஆட்டம் டி20 கிரிக்கெட்டுக்காக உருவாக்கப்பட்டது. சுப்மன் கில் 50 ஓவர் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டவர்”

- Advertisement -

“எனவே அவர் தம்மால் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியுமா என்பதில் சரியான முடிவை விரைவில் எடுக்க வேண்டும். குறிப்பாக சுப்மன் கில் சுழலுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் வங்கதேச தொடரிலும் சுழலில் தடுமாறினார். அவர் 50 ஓவர் கிரிக்கெட்டில் பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களில் 5 பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் இருக்கும் போது அசத்துகிறார். ஆனால் அதை பந்து சுழலும் போதும் அவர் செய்ய வேண்டும். எனவே வேகம் மட்டுமல்லாமல் சுழல் பந்து வீச்சிலும் அவரை சோதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Gambhir

அவர் கூறுவது போல விராட் கோலியை தவிர்த்து பெரும்பாலான வீரர்களால் 3 வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட முடியாததை வரலாற்றில் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் சுப்மன் கில் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு தான் அதிகமாக பொருந்துவார் என்று தெரிவிக்கும் கம்பீர் பிரித்வி ஷா இயற்கையாகவே டி20 கிரிக்கெட்டுக்கு பொருந்தக் கூடியவர் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் 2023 : அனைவர்க்கும் முன்பாக வலைப்பயிற்சியை ஆரம்பித்த தல தோனி – வைரலாகும் வீடியோ

அவர் கூறுவது போல் சுப்மன் கில் சீரான வேகத்தில் ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்டவர் என்பதும் பிரிதிவி ஷா முன்னாள் வீரர் சேவாக் போல பவர் பிளே ஓவர்களில் சரவெடியாக ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்டவர் என்பதை அனைத்து ரசிகர்களும் அறிவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சீரான வேகத்தை விட அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் தான் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement