10 – 12 பந்துகளுக்காக ஒரு இடத்தை வீணாக்கக்கூடாது, பண்ட் – டிகே விவாதத்தில் முன்னாள் இந்திய வீரர் கருத்து

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி நிறைய விவாதங்களை எழுப்பியுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகியதால் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க நேரிட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் திரும்பினாலும் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார். அதை விட ஒரு சேர தேர்வு செய்யப்பட்டுள்ள விக்கெட் கீப்பர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் விளையாடும் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது.

DK and Pant

- Advertisement -

அதில் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக மாறியதால் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் டி20 உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து 2022 ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 37 வயதுக்கு பின் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் நல்ல பார்மில் இருக்கும் அவரை சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் கழற்றிவிட்ட கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது.

டிகே தேவையா:
அதில் ஏற்கனவே 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று வருடக்கணக்கில் சுமராக செயல்பட்டு வரும் அவர் வழக்கம் போல சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைய 15 – 20 ரன்களை இந்தியா குறைவாக எடுத்திருந்ததாக அனைவரும் ஒப்புக் கொண்ட நிலையில் அந்த ரன்களை அடிக்கக்கூடிய தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் தோல்வி கிடைத்திருக்காது என்று அனைவரும் கருதினர்.

Rishabh Pant

அதனால் டி20 உலகக்கோப்பையில் மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் களமிறங்கி 10 – 12 பந்துகளை சந்தித்து பினிஷிங் செய்வதற்காக மட்டும் ஒரு இடத்தை வீணாக்கும் வகையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் டாப் 5 இடத்துக்குள் பேட்டிங் செய்ய அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால் இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்று கூறியுள்ள அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கார்த்திக், பண்ட் ஆகிய இருவரையும் ஒன்றாக வைத்து விளையாடக் கூடாது. அவ்வாறு செய்வது 6வது பந்துவீச்சாளர் கிடைப்பதை தடுக்கும். ஆனால் உலக கோப்பையில் நீங்கள் 5 பவுலர்களுடன் களமிறங்க கூடாது. உங்களுக்கு பேக்-அப் தேவைப்படுகிறது. ஒருவேளை சூர்யகுமார் யாதவ் அல்லது ராகுல் ஆகியோர் சுமாராக செயல்பட்டு நீக்கும் போது பண்ட்டை நீங்கள் தொடக்க வீரராக பயன்படுத்தலாம். ஆனால் அந்த இருவரும் ஒன்றாக மிடில் ஆர்டரில் விளையாடுவதை நான் பார்க்க விரும்பவில்லை”

Gambhir

“அதனால் உலகக் கோப்பையின் முதல் போட்டியை நீங்கள் ரிஷப் பண்ட் வைத்து தொடங்க வேண்டும். ஏனெனில் இதற்கு முன் நான் ஏற்கனவே கூறியிருந்தது போல் 10 – 12 பந்துகளை எதிர்கொள்வதற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது. காரணம் அவர் உங்களுக்கு கியாரண்டியாக வெற்றி பெற்றுக் கொடுப்பார் என்று சொல்ல முடியாது. அத்துடன் தினேஷ் கார்த்திக் டாப் 5 இடத்துக்குள் பேட்டிங் செய்வதற்கான ஆர்வத்தையும் காட்டவில்லை. ஆனால் உங்களுடைய விக்கெட் கீப்பர் டாப் 5 இடங்களுக்குள் பேட்டிங் செய்பவராக இருக்க வேண்டும். அந்த வகையில் அந்த திறமையை பெற்றுள்ள ரிஷப் பண்ட் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யக்கூடியவர்”

“எனவே என்னுடைய பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் இருப்பார். அதற்காக மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்பதை நான் நம்பவில்லை. இந்தியா போன்ற அணியில் அந்த அவசியமும் கிடையாது. இந்தியாவுக்காக போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அவசியம். அந்த வகையில் ரிஷப் பண்ட் 5வது இடத்திலும் பாண்டியா 6வது இடத்திலும் அக்சர் 7வது இடத்திலும் அஷ்வின் 8வது இடத்திலும் அதன்பின் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது சிறப்பாக இருக்கும்” என்று கூறினார். முன்னதாக இவரைப்போலவே பினிசிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று முன்னாள் தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement