இதை 2007லயே சொன்னேன் யார் கேட்டா? ஆர்சிபி வெற்றியால் ரசிகர்கள் இழப்பை.. சாடிய கம்பீர்

Gautam Gambhir 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்திய பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. அதன் காரணமாக தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பெங்களூரு அணியினர் வரலாற்று வெற்றியை வெறித்தனமாகக் கொண்டாடினார்கள்.

அதே வேகத்தில் அவர்கள் தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருவுக்கு சென்று திறந்தவெளிப் பேருந்தில் பயணித்து வெற்றியைக் கொண்டாட முடிவு செய்தனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து விட்டது. அதன் காரணமாக எம் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ரசிகர்களுடன் சேர்ந்து ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

- Advertisement -

2007லயே சொன்னேன்:

அதைக் காண்பதற்காக மைதானத்திற்கு வெளியே இலட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே சமயத்தில் ஒன்று திரண்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் இயற்கை எய்திய நிலையில் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஒரு அணி கோப்பைகளை வெல்லும் போது இது போன்ற வெளிப்புற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி திறந்த வெளிப்பேருந்தில் ஊர்வலமாக சென்று வெற்றியைக் கொண்டாடிய போதே தாம் இந்தக் கருத்தை தெரிவித்திருந்ததாக கம்பீர் கூறியுள்ளார். தற்போது அதை செய்து 11 ரசிகர்களை இழந்துள்ள ஆர்சிபி அணியை அவர் சாடியது பின்வருமாறு.

- Advertisement -

கம்பீர் கருத்து:

“அது போன்ற சாலைக் காட்சிகளை (ஃரோட் ஷோ) நான் நம்புபவன் கிடையாது. 2007இல் வெற்றி பெற்ற போதும் நான் இதே கருத்தை தெரிவித்திருந்தேன். நாம் எப்போதும் சாலைக் காட்சிகளை கொண்டிருக்கக்கூடாது. வருங்காலங்களில் அது போன்றவற்றை நாம் பெரிய மைதானங்களில் செய்யலாம். தங்களுடைய வாழ்வை இழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இதயம் செல்கிறது”

இதையும் படிங்க: ஃபார்ம் ஒரு பிரச்சனையே இல்ல.. விராட் கோலி திடீர்னு ரிட்டயாராக இதான் காரணம்.. கிரேக் சேப்பல் பேட்டி

“நாம் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே இங்கே நான் சொல்வேன். ஏனெனில் ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒருவேளை நாம் சாலைக் காட்சியை வெற்றிகரமாக நடத்த தயாராக இல்லையெனில் அதை ஒருபோதும் செய்யக்கூடாது. 11 பேரை இழக்கும் அளவுக்கு நீங்கள் எந்த நேரத்திலும் அதை செய்யக்கூடாது” என்று கூறினார்.

Advertisement