ஃபார்ம் ஒரு பிரச்சனையே இல்ல.. விராட் கோலி திடீர்னு ரிட்டயாராக இதான் காரணம்.. கிரேக் சேப்பல் பேட்டி

Greg Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை எடுத்துள்ளார். சமீப காலங்களாகவே தடுமாற்றமாக விளையாடி வந்த அகார் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்து 36 வயதிலும் மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்டுள்ளார்.

அதன் காரணமாக விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடி 10000 ரன்களை அடிப்பார் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக அவர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை இழந்தார். அந்த வகையில் மோசமான ஃபார்மில் இருக்கும் அவரால் அடுத்த இங்கிலாந்து தொடரிலும் அசத்த முடியும் என்று பிசிசிஐ நம்பவில்லை.

- Advertisement -

ஃபார்ம் காரணமில்லை:

அதனால் ரோஹித் சர்மாவுடன் சேர்த்து அவரையும் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்கள் இருவருமே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தது. இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு மோசமான ஃபார்ம் காரணமில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

மாறாக கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிமேலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை சமாளித்து நம்மால் அசத்த முடியாது என்று மனதளவில் சோர்ந்து போனதே விராட் கோலியின் ஓய்வுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஓய்வு முடிவு திறமை குறைந்ததால் வரவில்லை. ஒரு காலத்தில் அவரை மிகவும் வலிமையாக்கிய மனத் தெளிவை இனிமேலும் வரவழைக்க முடியாது என்ற உணர்தலில் இருந்து ஓய்வு பிறந்தது”

- Advertisement -

சேப்பல் கருத்து:

“மிகவும் உயர்ந்த மட்டத்தில் மனம் கூர்மையாகவும் தீர்க்கமாகவும் இல்லாவிட்டால் உடல் தளர்ந்து விடும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். சந்தேகம் எலும்புகளில் குடியேறத் தொடங்கும் போது அது உங்களுடைய முடிவெடுக்கும் செயல் திறனை சீர்குலைக்கிறது. ஃபுட் வொர்க் பாதிப்படைகிறது. விராட் கோலியின் ஓய்வு ஃபார்ம் மற்றும் உடல் இயக்கங்களை விட மனதின் செயல்பாடு தேய்ந்ததால் வந்தது என்பதை நினைவூட்டுவதாக அமைகிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா எங்கே? ஏர்போர்ட்டில் ரசிகர் கேட்ட கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2025 தொடரில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடிய 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார். அவரது உதவியுடன் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதே போல விராட் கோலியும் 18 வருடங்களுக்குப் பின் ஐபிஎல் கோப்பையை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

Advertisement