
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய பயிற்சியில் இந்திய அணி ஐசிசி 2025 சாம்பியன் டிராபியை வென்று அசத்தியது. அதே போல ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
அப்படி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் அசத்தும் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடி வருகிறது. தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் வந்த பின் சொந்த மண்ணில் வங்கதேசத்தை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வழக்கமாக தோற்கடித்தது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா அவமான ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.
அடுத்து நடைப்பெற்ற ஆஸ்திரேலியா தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டு 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா கடுமையாக போராடி சமன் செய்தது.
இந்நிலையில் உள்ளூரில் மட்டும் இந்திய அணி புலியாக செயல்படுவது முக்கியமல்ல என்ற கௌதம் கம்பீர் கூறியுள்ளார். எனவே வெளிநாடுகளில் அசத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியை மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் உலகின் சிறந்த அணியாக இருக்க விரும்புகிறீர்கள் என்பது முக்கியமல்ல”
“சொந்த ஊரில் டாமினேட் செய்வது மட்டும் முக்கியமல்ல. அதற்கு சமமாக வெளிநாட்டிலும் டாமினேட் செய்வது முக்கியம். அதன் அடிப்படையில் இளம் இந்திய அணிக்கு இங்கிலாந்து தொடர் பெரிய சோதனையாக இருந்தது. அங்கே அனுபவமற்ற இளம் அணி அசத்திய விதம் நன்றாக இருந்தது. நீங்கள் சொந்த ஊரில் மட்டும் டாமினேட் செய்து விட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதில் அர்த்தமில்லை. அப்படி வென்றால் அதற்கு நீங்கள் தகுதியானவர்களாக இருக்க முடியாது”
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 ஆவது அணியாக வரலாற்று சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ
“நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியை எனது பயிற்சியாளர் கேரியரில் மறக்க மாட்டேன். மறக்கவும் கூடாது. நீங்கள் கடந்த காலத்தை மறக்கக்கூடாது. மறந்தால் அனைத்தும் கிடைத்ததாக நினைப்பீர்கள். அனைவரும் நாங்கள் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்று நினைத்தோம். ஆனால் அவர்களிடம் தோற்றதே விளையாட்டாகும். அந்த தோல்வியை எங்களுடைய அணிக்கு அடிக்கடி நினைவுபடுத்துவேன். ஏனெனில் நீங்கள் துளியளவு இடம் கொடுத்தாலும் வெற்றி பறிபோய் விடும்” என்று கூறினார்.