இப்படியா பண்ணுவீங்க? இப்படியே போனால் சரிவராது – லக்னோ வீரர்களை சுளுக்கெடுத்த கம்பீர் பேசியது என்ன?

Gautam Gambhir LSG
- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறி விட்டதால் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய 8 அணிகளிடம் கடும் போட்டி காணப்படுகிறது. அந்த வகையில் புனேவில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 57-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Avesh Khan LSG vs GT

இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இந்த 2 அணிகளும் தொடர் வெற்றிகளால் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளது. எனவே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் சுமாராக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 144/4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

குஜராத் தகுதி:
அந்த அணிக்கு தொடக்க வீரர் ரித்திமான் சாஹா 5 (11) மேத்தியூ வேட் 10 (7) கேப்டன் ஹர்டிக் பாண்டியா 11 (13) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அடுத்து வந்த டேவிட் மில்லரும் 26 (24) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற சுப்மன் கில் நல்ல வேளையாக 7 பவுண்டரியுடன் 63* (49) ரன்கள் எடுத்து காப்பாற்றினார். இறுதியில் ராகுல் திவாடியா அதிரடியாக 22* (16) ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் பந்துவீச்சில் கலக்கிய அவேஷ் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

LSG vs GT

அதை தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கைத் துரத்திய லக்னோ எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் குஜராத்தின் அற்புதமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி ஆரம்பத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை மளமளவென இழந்து 13.5 ஓவர்களில் ஆல் அவுட்டாகி வெறும் 82 ரன்களுக்கு சுருண்டது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகள் எடுக்க 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அந்த அணி ஐபிஎல் 2022 தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரபூர்வமாக தகுதி பெற்று சாதனை படைத்தது.

- Advertisement -

82க்கு ஆல் அவுட்:
மறுபுறம் பங்கேற்ற 12 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த லக்னோ தொடர்ந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறது. தற்போதைய நிலைமையில் அடுத்த 2 போட்டிகளில் ஏதேனும் 1 வெற்றி அல்லது தோல்வியடைந்தாலும் கூட அந்த அணி பிளே ஆப் சுற்று செல்வது உறுதியாகியுள்ளது. ஆனாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக கேஎல் ராகுல், குயின்டன் டி காக் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் 100 ரன்களை கூட தாண்ட முடியாமல் வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற சுமாரான பேட்டிங் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக அந்த அணி வீரர்களிடையே புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் குறைக்க வல்லதாகும்.

LSG KL Rahul

எனவே இதை இப்படியே விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று உணர்ந்த அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் நேற்றைய போட்டி முடிந்த பின் உடை மாற்றும் அறையில் அனைத்து வீரர்களையும் சுளுக்கெடுக்கும் அளவுக்கு கடுமையாக பேசினார். இதுபற்றி அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.” தோல்வி அடைவதில் எந்த தவறும் கிடையாது. ஒரு போட்டியில் ஒரு அணி வென்றால் மற்றொரு அணி தோற்க வேண்டும். இருப்பினும் தோல்வி அடைவதில் நிறைய தவறுகள் இருந்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாம் விட்டு கொடுத்து விட்டோம். நாம் பலவீனமாக இருந்தோம்”

- Advertisement -

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஐபிஎல் போன்ற எந்த ஒரு விளையாட்டு தொடரிலும் பலவீனம் என்ற பேச்சுக்கே இடமிருக்க கூடாது. அதில் தான் பிரச்சனை உள்ளது. இந்தத் தொடரில் நாம் சிறப்பாக விளையாடிய அணிகளை கூட தோற்கடித்து சிறப்பான போட்டிகளில் விளையாடினோம். ஆனால் இன்று இந்த விளையாட்டு உணர்வை தவறவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்”

“அவர்கள் (குஜராத்) சிறப்பாக பந்து வீசினார்கள், அவர்கள் சிறப்பான பந்து வீசுவார்கள் என்று நமக்கும் தெரியும். இது ஒரு தரமான சர்வதேச பவுலர்கள் விளையாடும் உலகத்தரம் வாய்ந்த தொடராகும். எனவே எதிரணி நமக்கு சவாலை கொடுக்க வேண்டும் என்ற வகையிலே நாம் விளையாடுவோம்” என்று காட்டமாக பேசினார்.

இதையும் படிங்க : இவ்ளோ நடந்தும் அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல. சி.எஸ்.கே நிர்வாகம் மீது – ரசிகர்கள் அதிருப்தி

அடுத்ததாக லக்னோ வரும் மே 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளை தனது கடைசி 2 லீக் போட்டிகளில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement