இவ்ளோ நடந்தும் அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல. சி.எஸ்.கே நிர்வாகம் மீது – ரசிகர்கள் அதிருப்தி

CSK-Fans
Advertisement

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது மிக மோசமான தொடராகவே அமைத்துள்ளது. ஏனெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், அதிக கோப்பையை கைப்பற்றிய அணிகளில் இரண்டாவது இடத்திலிருக்கும் சிஎஸ்கே அணியானது கடந்து 2020-ஆம் ஆண்டினை அடுத்து இந்த வருடமும் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து உள்ளது என்றே கூறலாம்.

CSK MS Dhoni Ravindra Jadeja

தற்போது வரை புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கும் சி.எஸ்.கே அணியானது இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இந்நிலையில் இப்படி சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாததும், சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் தீபக் சாஹர் ஏற்கனவே காயம் காரணமாக விளையாடாத வேளையில் சென்னை அணி பந்து வீச்சில் பலம் இழந்து காணப்படுகிறது. அதே வேளையில் சிஎஸ்கே அணியில் அவரது இடத்தினை நிரப்ப ஒரு வீரர் இருந்தும் அவரை உபயோகிக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rajvarthan Hangarekar

அதன்படி நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹங்கரேக்கருக்கு சிஎஸ்கே அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவரை சிஎஸ்கே அணி ஏன் இதுவரை ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை என ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

- Advertisement -

பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பவர் என்பதனால் அவருக்கு ஒரு சில போட்டிகளிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் தான் உள்ளார். அதோடு கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் வீரர்களின் ஓய்வறையில் கூட அமராத அவர் கையில் கொடியைப் பிடித்துக் கொண்டு ரசிகர்களுடன் ரசிகராக உட்கார்ந்து கொடி அசைத்து விசிலடித்து ஆதரித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : ரோஹித்தும், கோலியும் கொடுத்த அந்த அறிவுரை தான் இப்போ நான் ஃப்ரீயா ஆட காரணம் – இஷான் கிஷன் பேட்டி

இந்நிலையில் அவர் இப்படி தொடர்ச்சியாக சி.எஸ்.கே அணியால் புறக்கணிக்கப்பட்டு வருவது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சென்னை அணி அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement