10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கொடுத்த அட்வைஸ் தான் இன்னைக்கு கோலி புகழின் உச்சத்தில் இருக்காரு – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

விராட் கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கேப்டனாக இருந்து உலக கோப்பை தொடரை வென்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழைந்தவர். 2008 ஆம் ஆண்டு நடந்த அந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் கையோடு பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி அவரை ஐபிஎல் தொடரில் எடுத்துக்கொண்டது.

Kohli 3

- Advertisement -

அதன் பின்னர் தோனியின் தலைமையில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். 2009 ஆம் ஆண்டு அறிமுகமான போது இலங்கைக்கு எதிராக அந்த போட்டி வந்தது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிறிஸ்டன். அவர் தோனியின் வழிகாட்டியாகவும் விராட் கோலியின் பேட்டிங் ஆக்ரோஷத்தை மாற்றியவராகவும் இருந்துள்ளார்.

இதுகுறித்து தற்போது கேரி கிறிஸ்டன் பேசியுள்ளார். அவர் கூறுகையில்..

நீ மிகவும் இளமையாக இருக்கிறாய். சர்வதேச அளவில் ஜொலிக்கும் திறமை உன்னிடம் இருக்கிறது. உனக்கு சர்வதேச அரங்கில் நீண்ட நாள் வேலை இருக்கப் போகிறது.. ஆனால் உன்னை எவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்வது என்பதை நீ கற்றுக் கொள்ள வேண்டும். உன்னை நீயே இந்த பகுதிகளுக்குள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் .

- Advertisement -

Kirsten 2

உனக்கு திறமை அதிகமாக இருக்கிறது. உன்னுடைய திறமையை வெளி வரும் அளவிற்கு நீ இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆசுவாசமாக ஆட வேண்டும் என்று விராட் கோலியிடம் நான் பேசினேன். அதன்பின்னர்தான் அவர் மிகவும் ஆக்ரோசமாக ஆட தொடங்கினார் என கேரி கிறிஸ்டன் தற்போது கூறியுள்ளார்.

Kohli-1

அதன் பின்னர் விராட் கோலியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு கேரி கிறிஸ்டன் இரண்டு வருடம் பயிற்சியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறியபடியே தற்போது 10 ஆண்டுகளில் இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் கோலி தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement