தோனி மற்ற வீரர்களை விட ஸ்பெஷல். அதற்கு இந்த 4 குணங்கள் தான் காரணம் – கேரி க்ரிஸ்டன் ஓபன் டாக்

Kirsten 3
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி க்ரிஸ்டனை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. ஏனெனில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றிய போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் அவர்தான். இது மட்டுமல்லாது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரர் ஆக அவர் இருந்தாலும் இந்திய அணிவீரர்களின் மீது தனிப்பிரியம் மற்றும் நம்பிக்கை வைத்திருந்தார்.

Kirsten 1

- Advertisement -

மேலும் தனது சொந்த நாட்டு அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது தோற்று விடக் கூடாது என்ற காரணத்திற்காக முன்கூட்டியே சில வீரர்களை தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று தனிப்பட்ட முறையில் தனது சொந்த இடத்தில் பயிற்சி கொடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்யவும் இவர் அரும்பாடுபட்டார்.

இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பெரும் மாற்றத்தைக் கொண்டு பல வெற்றிகளை குவித்தது அதுமட்டுமின்றி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பை வெற்றி இவரது தலைமையில் இந்திய அணி செய்த மிகப்பெரிய சாதனையாகும் .இப்படி இவரது பயிற்சி காலத்தில் நடைபெற்ற சிறப்பான தருணங்கள் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கேரி க்ரிஸ்டன்.

Kirsten 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு பயிற்சி அளித்த நாட்கள் எப்போதும் என் நினைவில் இருக்கும். இந்திய அணிக்கு பயிற்சி அளித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் அந்த பணியை நான் விரும்பி செய்தேன் எனது வாழ்நாளில் மிக சிறப்பான தருணம் என்றால் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை நினைவுகளை கூறுவேன்.

- Advertisement -

ஒவ்வொரு இந்திய வீரரும் உலகக்கோப்பையை வெற்றிபெற முனைப்போடு இருந்தார்கள். அதேசமயம் கடைசி கட்டத்தில் மிக சிறப்பாக விளையாடி வெற்றியும் பெற்றார்கள். தோனி ஒரு ஆச்சரிய பட கூடிய திறமை வாய்ந்த வீரர் அவருடைய ” அமைதியான குணம், நுட்பமான அறிவு ,மிக சிறப்பாக செயல்படும் திறன் மற்றும் பெஸ்ட் பினிஷேர்” என்ற குணங்கள் அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து அவரை தனிப்பட்ட முறையில் காட்டுகிறது. தோனியை சிறந்த வீரராக மாற்றியதும் இதுதான்.

Dhoni

மேலும் அவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை அவரே முடிவு செய்யட்டும் அதேபோன்று சாம்பியன் வீரரான சச்சின் டெண்டுல்கர் உடன் பணியாற்றியது மிக எளிமையாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நான் பயிற்றுவித்த இந்திய அணியில் கோலி சிறந்த வீரராக திகழ்ந்தார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அவரது உடல் வளர்ச்சி பிரமாண்டமான வகையில் உள்ளது தற்போது மிகச் சிறந்த வீரராக அவர் வளர்ந்து நிற்கிறார் என்று கோலியை கேரி க்ரிஸ்டன் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement