இந்தியா மாதிரி பாகிஸ்தான் இல்ல.. 6 மாதத்தில் வெளியேறிய 2011 உ.கோ வென்ற கேரி கிர்ஸ்டன்.. புதிய கோச் அறிவிப்பு

Gary Kirsten
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அத்துடன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அவமான தோல்விகளையும் சந்தித்தது. அதை சரி செய்வதற்காக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டனை பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளராக நியமித்தது.

சர்வதேச அளவில் விளையாடிய நல்ல அனுபவத்தை கொண்ட அவர் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பயிற்சியாளராக முக்கிய பங்காற்றினார். அதனால் பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவருடைய தலைமையிலும் களத்தில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் தோற்று வெளியேறியது.

- Advertisement -

கேரி கிர்ஸ்டன் ராஜினாமா:

அப்போது பாகிஸ்தான் அணியில் எந்த வீரர்களிடமும் ஒற்றுமை இல்லை என்று கேரி கிர்ஸ்டன் தெரிவித்திருந்தார். அதனால் உலகிலேயே பாகிஸ்தான் போன்ற அணியை தாம் பார்த்ததில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் பயிற்சியாளர் பதவியை கேரி கிர்ஸ்டன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட அவர் 6 மாதத்திற்கு மேல் பாகிஸ்தான் அணியில் செயல்பட முடியாமல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணியை தேர்ந்தெடுப்பதில் பயிற்சியாளர்கள் தலையிடக்கூடாது என்று அந்நாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. அதற்கு டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்ப்பி சம்மதம் தெரிவித்தார்.

- Advertisement -

இந்தியா மாதிரி இல்ல:

ஆனால் கேரி கிர்ஸ்டன் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிய வருகிறது. அதனால் ஏற்கனவே சொன்னது போல் ஒற்றுமையில்லாத பாகிஸ்தான் அணியில் ஒப்பந்தப்படி 2026 வரை பயிற்சியாளராக செயல்பட அவர் விரும்பவில்லை. அதனால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அவர் பாகிஸ்தான் வாரியத்திடம் கடிதத்தை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான பயிற்சியாளாக வி.வி.எஸ் லக்ஷ்மணன் செயல்பட வாய்ப்பு – என்ன காரணம்?

அதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் வாரியம் ஜேசன் கில்லஸ்ப்பி வெள்ளைப்பந்து அணிகளுக்கும் புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. மொத்தத்தில் இந்தியா போல பாகிஸ்தான் இல்லை என்பது கேரி கிர்ஸ்டன் ராஜினாமாவில் இருந்து தெரிய வருகிறது என்றே சொல்லலாம். இது போக வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டன்ஷிப் பதவியை பாபர் அசாம் சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வான் புதிய கேப்டனாக செயல்படுவார் என்றும் பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement