எம்.எஸ்.கே பிரசாத் வேண்டாம். தமிழக வீரரை தேர்வுக்குழு தலைவராக நியமிக்கவுள்ள – கங்குலி

Prasad
- Advertisement -

பிசிசிஐ புதிய தலைவராக சென்ற மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர் பதவி ஏற்றதும் பல நடைமுறைகளை அதிரடியாக கொண்டுவந்துள்ளார். மேலும் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவர் வெற்றிகரமாக நடத்த உள்ளது குறிப்பிடதக்கது.

Prasad

- Advertisement -

கங்குலி பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடியான விடயங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தேர்வுக் குழுவை மாற்றியமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் பிசிசிஐ தேர்வு குழுவினர் மாற்றம் குறித்த முக்கிய ஆலோசனையை நடத்த இருப்பதாக தெரிகிறது.

ஏனெனில் விரைவில் இந்திய தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. எனவே புதிய தேர்வுக் குழுவாக அவர்களே நீடிக்க வாய்ப்புகள் இருந்தாலும் கங்குலி அதனை மாற்றம் செய்ய விரும்புகிறார். மேலும் புதிய தேர்வுக் குழுவை அமைக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஏனெனில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தற்போதைய தேர்வுக்குழு சர்வதேச அனுபவம் இல்லாத குழு என்றும் கோலி மற்றும் ரவி சாஸ்திரி என்ன சொல்கிறார்களோ அதை கேட்டு செயல்படுகிறார் என்றும் போதிய அனுபவம் இல்லை என்றும் தவறான தேர்வுகளை அவர்கள் செய்கிறார்கள் என்றும் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

Ravi

இந்நிலையில் தற்போது அவர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி கங்குலி புதிய தேர்வுக் குழுவை ஏற்கனவே தயார் செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தமிழக வீரரான மற்றும் சர்வதேச அளவில் அனுபவம் கொண்ட, கிரிக்கெட் குறித்து அனைத்து புள்ளி விவரம் தெரிந்த நிபுணரான தமிழகத்தைச் சேர்ந்த எல் சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அவரது தலைமையில் தேர்வு குழு அமையும் என்றும் தெரிகிறது.

LS

மேலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், அஜித் அகர்கர், ரோகன் கவாஸ்கர் மற்றும் தீப் தாஸ் குப்தா போன்ற பல முன்னாள் வீரர்கள் தேர்வு குழுவில் இடம்பெற இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சிறந்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் புதிய தேர்வுக் குழுவை அமைக்க கங்குலி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே விரைவில் இந்திய அணியின் தேர்வுக்குழு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement