அவரைப்பற்றி எதுவும் என்னிடம் கேட்காதீங்க. நான் எதுவும் சொல்லமாட்டேன் – திட்டவட்டமாக மறுத்த கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது சர்ச்சையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை பெற்றார். மேலும் நேரடியாக ட்விட்டரில் ரசிகர்கள் அவரை திட்டுவதும் அவ்வப்போது வாடிக்கையாக இருந்தது. சமூகவலைதளத்தில் அவர் பேசும் சர்ச்சை கருத்துக்கள் அவரை கடும் விமர்சனத்திற்கு கொண்டு சென்றன.

Sanjay

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஜடேஜாவை அவர் ஆல்ரவுண்டர் இல்லை என்று மட்டமான ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார். ஆனால் உலக கோப்பை அரையிறுதி போட்டி நியூசிலாந்து அணிக்கு எதிராக தனியாளாக நின்று ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு வெகுவாக பாராட்டியும் பேசினார்.

அவரின் இதுபோன்ற கருத்துக்களால் ரசிகர்கள் அவர்மீது எரிச்சலில் இருந்தனர். மேலும் அப்போது ஜடேஜா நேரடியாக அவரை தாக்கி பேசியிருந்தார். அதுமட்டுமின்றி வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது இருட்டிய பின்னர் வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்ய திணறுகிறார்கள் லைட் வெளிச்சத்தில் பிங்க் நிற பந்துகள் கண்ணுக்கு தெரிகின்றதா என்று ஹர்ஷா போக்லே வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

Sanjay

அதற்கு சக வர்ணனையாளராக அந்த போட்டியில் இருந்த மஞ்ச்ரேக்கர் நீங்கள் வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட என்னை போன்றவர்கள் அது போன்ற கேள்வியைக் கேட்க மாட்டோம். ஏனெனில் களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும் என்று கூறினார்.

- Advertisement -

அவரின் இதுபோன்ற மற்றவர்களை மட்டும் தட்டும் வகையிலான பேச்சு அப்போதே சர்ச்சையாக வெடித்தது. மேலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற ரீதியிலும், தான் பெரியவர் என்ற ரீதியிலும் அவர் பலமுறை மற்றவர்களை மட்டம் தட்டி பேசியுள்ளார். இதன் காரணமாக ஏகப்பட்ட அதிர்வலைகள் அவருக்கு எதிராக இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வந்த அவரை தற்போது வர்ணனை குழுவில் இருந்து பி.சி.சி.ஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

Sanjay

மேலும் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம் குறித்து கங்குலி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். மேலும் அது குறித்து நான் எதுவும் பேச போவதில்லை என்றும் அவர் சொல்லிவிட்டார். ஆனால் மஞ்சரேக்கர் செயல்பாடுகள் மீது திருப்தி இல்லாததால் அவரது வர்ணனையாளர் பதவி பறிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement