உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது. நாங்க சொல்றத மட்டும் கேளுங்க – ஜடேஜாவிற்கு “நோ” சொன்ன கங்குலி

- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மிகநீண்ட தொடரில் விளையாடிவிட்டு இந்தியா திரும்பியுள்ளது. அந்த அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் வாஷ் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் தோல்விகளால் இந்திய அணி சற்று ஆட்டம் கண்டுள்ளது என்றே கூறலாம்.

Williamson-1

- Advertisement -

அதனை தொடர்ந்து நாடு திரும்பிய வீரர்கள் தற்போது ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதி போட்டி வரும் 9-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் சௌராஷ்ட்ரா அணியும், மேற்குவங்க அணியும் மோதுகின்றன. இதில் சௌராஷ்டிரா அணிக்காக இந்திய வீரர்களான செட்டேஸ்வர் புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட உள்ளனர்.

மேற்குவங்க அணியில் விருதிமன் இடம்பெற்றுள்ளார் . இந்நிலையில் சவூராஷ்டிரா அணிக்காக ஆட ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியில் இருந்து விடுவிக்குமாறு சவூராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்தது.

- Advertisement -

ஆனால் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் சௌரவ் கங்குலி .இதுகுறித்து அவர் கூறியதாவது : தென்னாபிரிக்க தொடர் வரும் 12ம் தேதி தொடங்க உள்ளது. அந்த நேரத்தில் ஜடேஜா ரஞ்சி கோப்பை தொடரில் ஆட முடியாது.

Jadeja

ஏனெனில் நாட்டுக்காக ஆடுவதுதான் முதலில் முக்கியம். இதனால் ஜடேஜா கண்டிப்பாக சவூராஷ்டிரா அணிக்காக ஆட முடியாது. இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் கங்குலி.

Advertisement