- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கிங் ஆஃப் ஆப் சைடு என்று கங்குலிக்கு பெயர் வர காரணம் இதுதான் – அவரது பிறந்தநாள் அன்று சிறப்பு பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் “தாதா” சவுரவ் கங்குலி இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1972 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பிறந்த கங்குலி சிறுவயதில் கால்பந்து மீது நாட்டம் கொண்டிருந்தார். அதன் பின்னர் தனது அண்ணனின் பயிற்சி மூலம் அவர் கிரிக்கெட் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.

அதன் பிறகு ரஞ்சி கோப்பை துலீப் கோப்பை போன்ற முதல்தர கிரிக்கெட்டில் ஜொலித்ததால் அவர் 1992ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தேர்வானார். ஆனால் அவருக்கு தொடக்கம் அவ்வளவு சரியாக அமையவில்லை. பின்னர் மீண்டும் 1996 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று இங்கிலாந்து செல்லும் அணியில் தேர்வானார். அப்பொழுது தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்த ஆரம்பித்த கங்குலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மைதானத்தில் ஆப் சைடில் எத்தனை பீல்டர்களை நிறுத்தி வைத்தாலும் துல்லியமாக பீல்டர்களின் இடையில் பவுண்டரிகளை அடிக்கும் திறமை படைத்தவர் கங்குலி. அதைப் போன்று பல பவுண்டரிகளை அடித்துள்ளதால் அவரை கிரிக்கெட் உலகம் “கிங் ஆஃப் ஆப் சைடு” என்று செல்லமாக அழைத்தது.

மேலும் ஒவ்வொரு முறை அவர் சிக்ஸ் அடிக்க இறங்கி வரும்போது பந்து வெளியே செல்லும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்ததும் உண்டு. 2000மாவது ஆண்டு சச்சின் கேப்டனாக இருந்தபோது அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை கையில் எடுத்து செயல்பட ஆரம்பித்தார் கங்குலி.

- Advertisement -

அதன் பின்னர் தனது சிறப்பான கேப்டன்சி மூலம் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு மைதானங்களில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் வெளிநாடுகளில் படைத்தார். சிறப்பாக விளையாடி வந்த கங்குலியின் இருண்ட காலம் என்றால் அது கிரேக் சேப்பல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட காலம் என்று கூற வேண்டும்.

ஏனெனில் சேப்பலுக்கும் அவருக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு மோசமடைந்தது சர்ச்சைகளில் சிக்கினார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அனைத்திலும் இருந்து தனது ஓய்வு முடிவினை கங்குலி அறிவித்தார். இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததுடன் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அல்லது நல்ல வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வந்ததும் கங்குலி தான்.

யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர்கான், சேவாக் மற்றும் தோனி போன்ற பல முக்கியமான வீரர்கள் கங்குலி தலைமையில்தான் இந்திய அணிக்குள் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தலைமுறையில் ஆக்ரோஷமான கேப்டன் யார் என்றால் அனைவரும் கோலியை கூறுவார்கள். ஆனால் உண்மையில் கிரிக்கெட் உலகின் ஆக்ரோஷமாக கேப்டன் என்பது கங்குலி ஒருவர் மட்டுமே என்பது நாம் அனைவரும் அறிந்தது. இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் நண்பர்களே.

- Advertisement -
Published by