அவரைத்தாண்டி புதிய பயிற்சியாளரை நியமித்ததில் எனக்கு விருப்பமில்லை – அதிருப்தியில் பேசிய கங்குலி

Ganguly

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இணையாக கடந்த சில வருடங்களாகவே இந்திய மகளிர் கிரக்கெட் அணியும் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இந்திய மகளிர் கிரிக்கெட்டைச் சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை எழுந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராமனின் பதவிக்காலம் முடிந்துபோகவே, இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னரான ரமேஷ் பவாரை இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது மகளிர் கிரிக்கெட் அணிக்கான ஆலோசனைக் குழு.

raman

ராமனை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியது, அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தற்போது இந்த சர்ச்சையைப் பற்றி பேசியுள்ளார் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. தனியார் விளையாட்டு இணையதறம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய மகளிர் அணிக்கான தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த ராமனை, அந்த பதிவியில் இருந்து நீக்கியது எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிவரை சென்றதற்கு, ராமனின் திறமையான பயிற்சியும் ஒரு காரணம்.

- Advertisement -

இப்படி அவர் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவரை பதவியிலிருந்து நீக்கிய முடிவால் நான் அதிருப்தியில் இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இந்திய மகளிர் அணிக்கு ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்புவரை, ரமேஷ் பவார் தான் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அப்போது மிதாலி ராஜுக்கும் ரமேஷ் பவாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ரமேஷ் பவார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரையே மீண்டும் பயிற்சியாளராக நியமித்திருக்கிறது மகளிருக்கான கிரிக்கெட் ஆலோசனைக் குழு.

raman 1

தற்போது இந்திய அணியில் இருக்கும் சில முக்கியமான வீராங்கனைகள் ராமன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்ததால் தான் அவரின் பதவி பறிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 2018ஆம் ஆண்டு இந்திய மகளிருக்கான தலைம்ப் பயிற்சியாளராக ராமன் பொறுப்பேற்றதிலிருந்து, இந்திய மகளிர் அணி ஐந்து ஒரு நாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது. அதில் இந்த ஆண்டு நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான தொடரை மட்டுமே இந்திய மகளிர் அணி இழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

powar

மேலும் ரமேஷ் பவார் பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் அணி முதலில் இங்கிலாந்து நாட்டுக்கும் அதனையடுத்து ஆஸ்திரலியாவிற்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

Advertisement