ஐ.பி.எல் தொடரில் தொடர் சொதப்பல். விராட் கோலிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? – கங்குலி பதில்

ganguly
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 13 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இன்னும் அவர்கள் ஒரு போட்டியில் நல்ல வெற்றி பெற்றால் கூட பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தொடரில் முன்னாள் கேப்டனான விராட் கோலி 13 போட்டிகளில் விளையாடி 236 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக மூன்று முறை அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளது அவரது கிரிக்கெட் கேரியரில் மிக மோசமான நிலையை சுட்டிக்காட்டியுள்ளது.

Virat Kohli Bowled

விராட் கோலி இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளதால் அடுத்ததாக நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அவர் இடம் பெறுவாரா என்கிற அளவுக்கு தற்போது அவரின் ஆட்டம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் சீனியர் வீரர்களை இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதனை தொடர்ந்து அவர்கள் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virat Kohli

இதன்காரணமாக பரிதவித்து நிற்கும் சீனியர் வீரர்களை இந்திய அணி தேர்வு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அடுத்தாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்களா? என்பது குறித்து பிசிசிஐயின் தலைவரான கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா, கோலி போன்ற வீரர்கள் மிகப் பெரிய வீரர்கள் இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் அளித்த பங்களிப்பு என்பது அளப்பரியது. அவர்களை போன்ற பெரிய வீரர்கள் மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு சில போட்டிகளே தேவைப்படும்.

இதையும் படிங்க : அடுத்த வருஷம் சி.எஸ்.கே அணியில் தான் தோனி இருப்பாரு. ஆனா எந்த பதவியில் தெரியுமா? – கவாஸ்கர் விளக்கம்

அந்த வகையில் தற்போது அவர்கள் மோசமான சரிவை சந்தித்து வந்தாலும் ஒரு சில போட்டிகளில் அவர்கள் பழைய பார்முக்கு திரும்ப வருவார்கள். எனவே நிச்சயமாக இந்திய அணியில் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள். டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் பல மாத காலம் இருக்கிறது. அதற்குள் கோலி பழைய பார்முக்கு திரும்பி விடுவார் என்று தான் நம்புவதாகவும் கங்குலி கூறினார்.

Advertisement