அடுத்த வருஷம் சி.எஸ்.கே அணியில் தான் தோனி இருப்பாரு. ஆனா எந்த பதவியில் தெரியுமா? – கவாஸ்கர் விளக்கம்

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வரும் வேளையில் ஏற்கனவே இத்தொடரில் இருந்து சென்னை அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் வாய்ப்பினை இழந்த நிலையில் இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே மோத இருக்கிறது. இப்படி இந்த தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழக்க ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

CSK Ms DHoni

- Advertisement -

ஏனெனில் ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதால் மீண்டும் தோனியிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. அப்படி மீண்டும் தோனி தலைமையில் சென்னை அணி விளையாடும் போது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டிலாவது இதுபோன்ற மோசமான தோல்விகளை தவிர்க்க சென்னை அணி என்னென்ன வரைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கருத்துக்கள் இப்போது அனைவரிடமும் எழுந்துள்ளன. அந்த வகையில் தோனி இல்லை என்றால் சென்னை அணியின் நிலைமை மோசமாகிவிடும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வரும் வேளையில் அடுத்த ஆண்டு விளையாடுவாரா? அல்லது சிஎஸ்கே அணியில் எந்த பொறுப்பில் இருப்பார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி ஏற்கனவே அளித்துள்ள ஒரு பேட்டியில் அடுத்த வருஷமும் என்னை மஞ்சள் நிறத்தில் பார்ப்பீர்கள் ஆனால் ஒரு வீரராகவா அல்லது வேறு எந்த ஒரு வடிவத்திலோ என்று கூறியுள்ளார். அப்படி என்றால் நிச்சயம் அவர் சிஎஸ்கே அணியில் தான் தொடர விரும்புகிறார் என்று உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ஆனால் ஒரு வீரராக இல்லாமல் ஒரு ஆலோசகராகவோ அல்லது மென்டராகவோ அல்லது அணியின் நிர்வாகியாகவோ பார்க்கலாம். எனவே நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்று அணி நிர்வாகத்துடன் இணைந்து ஒரு பணியை மேற்கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கிங் கோலினா சும்மாவா ! ஆல் டைம் ஐபிஎல் சாதனையை நெருங்க முடியாத பட்லர் – முழுவிவரம்

கவாஸ்கர் கூறியது போலவே : தோனி ஒரு வீரராக நீடிக்கவில்லை என்றாலும் நிச்சயம் சிஎஸ்கே அணியுடன் தான் ஒரு நிர்வாகியாக பயணிப்பார் என்பது உறுதியாகி உள்ளதால் அடுத்த ஆண்டு தோனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்பதும் பெரும் அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

Advertisement