தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணியை இவர்களே தேர்வு செய்வார்கள் – கங்குலி உறுதி

Prasad
- Advertisement -

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே பிரசாத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களை பிசிசிஐ நியமிக்க உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கங்குலி எம்எஸ்கே பிரசாத்தின் பதவிக் காலத்தை நீடிக்க விரும்பவில்லை என்றும் புதிய தேர்வுக் குழுவினை அமைப்பேன் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Prasad

- Advertisement -

இந்நிலையில் இந்த புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு முன் நியமிக்கப்படுவார்கள் என்று கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நேற்று மும்பையில் நடைபெற்ற தேர்வுக்குழு தலைமை குறித்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி இந்த தகவலை தெரிவித்ததோடு மேலும் ஐபிஎல் தொடர் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அதேபோல புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின் தான் தென்னாபிரிக்க தொடர்பான இந்திய வீரர்கள் தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். தற்போது இந்திய அணி நியூசிலாந்து தொடருக்கு சென்றுள்ளதால் அந்த தொடர் முடிந்து நாடு திரும்பியவுடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் குறித்து பேசிய கங்குலி ; நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை ஏற்கனவே பழைய தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்துவிட்டார்கள்.

Ganguly

எனவே புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்தியாவில் நடைபெற உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு முன் நியமிக்கப்பட்டு அவர்களே அணியை தேர்வு செய்வார்கள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் விரைவில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement