எவ்வளவு சீக்கிரம் முடியனுமோ அவ்வளவு சீக்கிரம் முடியனும். அதையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன் – கங்குலி வெளிப்படை

Ganguly
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன. அதன்படி இந்தியாவிலும் மிகப்பிரம்மாண்டமாக துவங்க இருந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரும் ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Ipl cup

- Advertisement -

இந்தியாவில் 13-ஆவது சீசனாக இந்த ஆண்டு துவங்க இருந்த ஐபிஎல் தொடர் ஆரவாரமான துவக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு இருவாரம் முன்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

இந்த வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாக தலைவரான சௌரவ் கங்குலி இந்த லாஃக்டவுன் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : லாஃக்டவுன் காலம் துவங்கி தற்போது ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முன்பெல்லாம் வீட்டில் நேரம் செலவிட என்னால் முடியாது எனது வாழ்க்கை முறை என்பது வேலைக்காக அதிக பயணம் செய்ய வேண்டும்.

Ganguly

ஆனால் கடந்த 30-32 நாட்களாக எனது வீட்டில் நான் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். என் மனைவி, மகள், அம்மா மற்றும் சகோதரர் என நீண்ட நாட்களுக்குப் பின் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். இருப்பினும் இந்த தற்போதைய நிலை என்னை மிகவும் அப்செட் செய்துள்ளது. ஏனென்றால் வெளியில் மக்கள் அதிகமாக கடினப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த இக்கட்டான சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது, அதனை எவ்வாறு தடுப்பது எனவும் தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த சூழல் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இது எங்கிருந்து, எப்போது, எப்படி வந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் இதனை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இது எவ்வளவு வேகத்தில் முடிவுக்கு வர வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

sana 6

கிரிக்கெட் குறித்து பேசுகையில் கங்குலி குறிப்பிட்ட விடயமானது : பிசிசிஐ நிர்வாக பணிகளை தற்போது நான் வீட்டிலிருந்தே கவனித்து வருகிறேன். கிரிக்கெட் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது அதே போல வாழ்க்கையிலும் உள்ள சிக்கலான சூழ்நிலையை தற்போது சந்தித்து வருகிறேன் அதையும் கடந்து வருவோம் என்று நினைக்கிறேன் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement