கொரானா வைரஸ் பாதிப்பு. ஐ.பி.எல் திட்டமிட்டபடி நடைபெறுமா ? – கங்குலி தெளிவான விளக்கம்

Ganguly
- Advertisement -

கோரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை 80 நாடுகளில் கோரோனா வைரஸ் தாக்கம் அடைந்தவர்களை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது பெரும்பாலும் வெளிநாட்டவர்களே ஆவர்.

Ipl cup

- Advertisement -

இதனால் பல நாடுகள் மக்கள் கூட்டமாக கூடுவதை தடை செய்துள்ளது. இந்தியாவிலும் சுகாதார நிறுவனங்கள் மக்கள் அதிகமாக கூட்டம் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது.

அந்த நேரத்தில் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். மேலும் வெளிநாட்டவர்கள் அதிகமாக இந்தியாவிற்கு வருகை தருவது அதிகரிக்கும். இதனால் ஐபிஎல் தொடர் எப்படி நடைபெறும் என ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர்.

Dhoni

இதற்கு தற்போது பிசிசிஐயின் தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : வைரசின் தாக்கம் இந்தியாவில் பெரிதாக இல்லை அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. எப்படி இருந்தும் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடைபெறும் இவ்வாறு தெரிவித்துள்ளார் சௌரவ் கங்குலி.

கங்குலியின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு பின்னர் தற்போது ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement