ஐ.சி.சி திட்டமிட்ட 4 நாட்கள் டெஸ்ட் போட்டி. அதற்கு கங்குலியின் பதில் இதுதான் – விவரம் இதோ

Ganguly

உலக அளவில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 9 நாட்டு அணிகளும் தங்களது தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முதன்முறையாக ஐ.சி.சி இந்தத்தொடரினை நடத்தி வருகிறது.

ICC

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு அடுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. அதன்படி அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பல மாற்றங்களைக் கொண்டுவர ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி ஐந்து நாட்கள் வரையறை கொண்ட டெஸ்ட் போட்டிகளை இனி நான்கு நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவும் மேலும் இந்த நாட்களை குறைத்தால் மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை அதிகமாக நடத்தலாம் என்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது தவிர நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியை நடத்தினால் ஒரு டெஸ்ட் போட்டியை அந்த தொடரில் அதிகமாகவும் நடத்த வாய்ப்புள்ளது. இது தவிர மற்றொரு சிறப்பம்சமாக ஒரு நாளில் வழக்கமாக வீசப்படும் 90 ஓவர்களை அதிகரித்து 98 ஓவர்களையும் சேர்க்க ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

Ganguly

இந்நிலையில் ஐசிசியின் இந்த புதிய திட்டம் குறித்து பிசிசிஐ இன் தலைவரான சவுரவ் கங்குலி தற்போது தனது கருத்தை ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் கங்குலி கூறியதாவது : ஐசிசியின் இந்த யோசனையை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் அந்த திட்டம் வரட்டும் பின்பு அதனை பார்த்துக்கொள்ளலாம். எனவே 4 நாள் ஆட்டம் குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது என்றும் அந்த திட்டத்தை ஆராய்ந்தால் மட்டுமே அதில் உள்ள விடயங்கள் புரியும் என்றும் கங்குலி கூறினார்.

- Advertisement -