இதுதான் நல்லது என்று தோனிக்கு தெரியும். அவர் சீக்கிரம் சொல்லிடுவார் – பட்டும் படாமல் பேசிய கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் பங்கேற்கவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தோனியின் பெயரும் இடம்பெறவில்லை.

Dhoni-1

- Advertisement -

மேலும் தோனியை கடந்த சில தொடர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் தோனி மீண்டும் இப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அவரின் ஓய்வு அறிவிப்பை வெளியிட கட்டாயப்படுத்துகிறார்களோ என்ற எண்ணமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பி.சி.சி.ஐ யின் தலைவருமான கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : சர்வதேச கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் கொண்ட தோனிக்கு எது சிறந்த முடிவு என்பது தெளிவாக தெரியும். நான் என்ன கூற நினைக்கிறன் என்பதும் அவருக்கு புரியும் என நினைக்கிறேன்.

sourav-ganguly-ms-dhoni

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களின் திறமை அதிக அளவில் வெளிப்படும் உலகிலேயே பெரிய கிரிக்கெட் லீக் ஐபிஎல் தொடர் தான். ஜூனியராக இருந்தாலும் சரி சீனியர் வீரராக இருந்தாலும் சரி இது நல்ல வாய்ப்பை உருவாக்கித் தரும். தோனி ஓய்வு குறித்து அவருடைய அனுபவம் நிச்சயம் நல்ல முடிவை எடுக்க வைக்கும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement