பாகிஸ்தானுடன் பிரச்சனை இருந்தாலும் இது நடக்கும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் அரசியல் சண்டைகளாலும், பதட்டமான சூழ்நிலை காரணமாகவும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில்லை. ஐ.சி.சி நடத்தும் பொதுவான கிரிக்கெட் தொடர்களிலேயே இரு அணிகளும் மோதி வருகின்றன.

Pakistan

- Advertisement -

கடந்த 2012ஆம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பொதுவாக நடைபெறும் ஐசிசி தொடர்களில் எதிரெதிரே சந்தித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்தியா மற்றும் பாகிஸதான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடைபெறவில்லை என்றாலும், பாகிஸ்தானுடன் பொதுவான நாட்டில் விளையாடுவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

pakisthan

இதனால் துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நிச்சயம் விளையாடும் என்று தெரிவித்துள்ளார் சௌரவ் கங்குலி.

Advertisement