ஐ.சி.சி யின் இந்த முடிவு தவறானது. தேவையில்லாம எதுவும் செய்ய வேணாம் – நேரடியாக எதிர்ப்பை காட்டிய தாதா

Ganguly
- Advertisement -

சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கும். ஆனால் காலப்போக்கில் மக்கள் அதனை சற்று தள்ளிவைக்க ஒருநாள் போட்டிகள் பிரபலமானது.

Ind-lose

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் இருந்து பிரிந்து இப்போது டி20 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிலையில் டீ20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் வருகையால் டெஸ்ட் போட்டிகளின் சுவாரசியம் குறைந்து தரம் குறைந்து வருவதாகவும் சமீபத்தில் ஐசிசி கூறியிருந்தது.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க ஐந்து நாட்கள் கொண்ட அந்த வடிவத்தை மாற்றி நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்தலாம் என்று யோசனை செய்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு நாட்கள் முறையை பயன்படுத்த இருப்பதாக திட்டம் வைத்திருப்பதாகவும் ஐசிசி தகவலை வெளியிட்டது.

ind-2

143 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் இருக்கும் நடைமுறையை மாற்றி நான்கு நாட்களாக குறைப்பது தவறு என்று ஏற்கனவே கோலி, டெண்டுல்கர், பாண்டிங், லாங்கர், லயன் என முன்னணி வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டி குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தனது எதிர்ப்பினை கருத்தாக வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Ganguly 1

4 நாள் டெஸ்ட் போட்டியை பிசிசிஐ விரும்பவில்லை. அதற்கு நான் பெரிய ரசிகன் கிடையாது. ஏனென்றால் நான்கு நாட்கள் போட்டி நடத்தப்பட்டால் பெரும்பாலான போட்டிகளுக்கு முடிவு கிடைக்காது. என்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் ஐந்து நாட்கள் ஆட்டம் இருந்தால் தான் சுவாரசியமாக இருக்கும் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement