கோலி மற்றும் ரவிசாஸ்திரி செய்த இந்த தவறே அரையிறுதியின் தோல்விக்கு காரணம் – கங்குலி சாடல்

Ganguly
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதியில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Kohli

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் இந்த தோல்விக்கு கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருடன் முடிவே காரணம் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் சிறப்பாக பந்து வீசிய ஷமியை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பயன்படுத்தவில்லை.

அவரை ஏன் அரையிறுதிபோட்டியில் எடுக்கவில்லை என்பது எனக்கு ஒரு கேள்வி எழுப்புகிறது. அதோடு மேலும் அரையிறுதி போன்ற முக்கியமான போட்டிகளில் அனுபவமுள்ள வீரர்கள் முன்கூட்டியே இறங்கினால் அது போட்டிக்கு நல்ல பலனை தரும். அதன்படி தோனி 5 ஆவது வீரராக களமிறங்க வேண்டும்.

Dhoni

ஏனெனில் பண்ட் மற்றும் பாண்டியா போன்றவர்களுக்கு இதுவே முதல் உலக கோப்பை தொடர் ஆகும். அவர்களின் அனுபவம் இது போன்ற பெரிய போட்டிகளுக்கு பத்தாது. எனவே தோனியை முன்பே அனுப்பியிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது என்றும் மேலும் இந்த தோல்விக்குக் காரணம் கோலி மற்றும் ரவி சாஸ்திரி எடுத்த முடிவுகளே காரணம் என்று கங்குலி சாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement