சேவாக், யுவராஜ், தோனி வரிசையில் இவரும் இந்திய அணியின் மேட்ச் வின்னராக ஜொலிப்பார் – கங்குலி பாராட்டு

Ganguly
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 1 என்கிற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் 4 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொடரை கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் தகுதியைப் பெறும் என்பதால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சுதாரித்து ஆடிய இந்திய அணி மிச்சம் மூன்று போட்டிகளிலும் அபாரமாக ஆடி தொடரை வென்றதோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

indvseng

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18ம் தேதி லண்டன் சவுத்தாம்ப்டன்’இல் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய கங்குலி பண்டை வெகுவாக பாராட்டினார். இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் இளம் வீரர்கள் மிக அழகாக விளையாடினர் என்று கங்குலி கூறினார். குறிப்பாக அக்ஷர் பட்டேல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் அவர்களது ஆட்டம் மற்றவர்களிடமிருந்து தனித்து இருந்தது.

கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பவுலிங்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடிய விதத்தில் அக்சர் படேல் பந்து வீசியது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆடிய விதம் மிகவும் அபாரமாக இருந்தது என்றும் கூறினார். மேலும் பேசிய கங்குலி , ரிஷப் பண்ட் ஐ ஒரு படி கூடுதலாக புகழ்ந்தார்.

Pant

நான் ஆடும் காலங்களில் இந்திய அணிக்கு மேட்ச் வின்னர்களாக விரேந்திர ஷேவாக், மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருந்தார்கள் அவர்களுக்கு இணையான மேட்ச் வின்னராக தற்போது பண்ட் இருக்கிறார் என்று நான் சொல்லுவேன் என்று கூறினார். ரிஷப் பண்ட் ஆட்டத்தை எந்த நிலையில் இருந்தும் தன் நிலைக்கு எடுத்துச் சொல்லும் திறமை வாய்ந்தவர். ஆட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருப்பி போடும் அளவுக்கு தைரியத்தை கொண்டுள்ளவர்.

pant 1

அவர் பொதுவாக ஒரு மேட்ச் வின்னர், அதையே தனக்கு கிடைக்கும் இடங்களில் நிரூபித்து வருகிறார் இனி வரும் காலங்களிலும் அதை அவர் நம் அனைவருக்கும் நிரூபிப்பார். இவ்வாறு கூறிய கங்குலி வருகிற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement