இவரைப்போன்ற ஒரு வீரரை எப்படி அணியிலிருந்து ஒதுக்க முடியும் – தமிழக வீரருக்கு சப்போர்ட் செய்த கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவராக கங்குலி தேர்வானதில் இருந்து இந்திய அணியில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவரது பதவிக்காலத்தில் இந்திய அணி ஐ.சி.சி நடத்தும் தொடர்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் மிகவும் உன்னிப்பாக இருக்கும் கங்குலி அவ்வப்போது இந்திய அணியில் பல முக்கிய அதிரடி மாற்றங்களை செய்து அணியை வழிநடத்தி வருகிறார்.

IND

- Advertisement -

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் அடுத்த 18 மாதங்களில் இரண்டு உலகக் கோப்பை போட்டித் தொடர்கள் நடைபெற இருப்பதனால் அதற்காக தற்போது இந்திய அணியை தயார் செய்யும் நோக்கில் அவர் தனது வேலைகளை மும்முரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஐ.சி.சி தொடர்களில் இதுவரை சிறப்பாக விளையாடி வரும் அஷ்வினை எவ்வாறு அணியிலிருந்து ஒதுக்க முடியும் என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ashwin 1

அஷ்வின் ஒரு அற்புதமான வீரர். அவரை இந்திய அணியில் இருந்து தள்ளி வைப்பது மிகவும் கடினம். 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டு இந்திய அணி ஐ.சி.சி தொடரை வென்ற போது அந்த அணியின் சிறப்பான பந்து வீச்சாளராக அஷ்வின் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி எப்போதெல்லாம் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறதோ அப்போதெல்லாம் தனது சிறப்பான பந்துவீச்சை அஷ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான்கூட உறுதியா இல்ல. ஆனா அஷ்வின் விஷயத்தில் கோலி ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு – கங்குலி ஓபன்டாக்

பவர்பிளே ஓவர்களிலும் சரி, முக்கியமான சூழ்நிலையிலும் சரி அவர் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்று கங்குலி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அஷ்வினின் டெஸ்ட் ரெக்கார்ட் என்பது மிகவும் சிறப்பான ஒன்று. கிரிக்கெட்டில் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை இந்த சாதனைகள் எடுத்துக்காட்டும். அவரைப் போன்ற வீரர்களை எப்போதும் அணியில் இருந்து தள்ளி வைக்கமுடியாது என்று அஷ்வின் குறித்து கங்குலி புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement