எனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் நேற்று தான். புகைப்படத்தை பகிர்ந்து விளக்கத்தை சொன்ன – கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார். தான் அறிமுகமான முதல் இன்னிங்சில் சதம் அடித்த கங்குலி 20 பவுண்டரிகளுடன் உதவியுடன் 131 ரன்களை குவித்தார்.

Ganguly

- Advertisement -

இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பத்தாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் 24 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அறிமுகமான தாக தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நினைவைப் பகிர்ந்து கங்குலி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த போட்டியில் தான் விளையாடிய சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் தான் போட்டி குறித்த நினைவை பகிர்ந்த கங்குலி தான் ஆட்டமிழந்த போது மறுமுனையில் டிராவிட் விளையாடிக் கொண்டிருந்தார் மறுநாள் காலையில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அவர் சதத்தை அடிப்பார் என்ற நம்பிக்கையோடு நான் லார்ட்ஸ் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் 5 ரன்னில் அவர் சதத்தை நழுவ விட்டார் அது சற்று எனக்கு கனமாக இருந்தது. அன்றைய தினம் அவரும் சதம் அடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கங்குலி பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவரின் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை கமெண்டாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக கருதப்படும் கங்குலி மொத்தம் 1996 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து 113 டெஸ்ட் 7212 ரன்களை குவித்துள்ளார். மேலும் 2008 ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு குறிப்பிடத்தக்கது.

Advertisement