இந்திய அணியின் வெற்றி எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் இதனைக்கண்டு நான் பிரமித்தேன் – கங்குலி பதிவு

Ganguly-2
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று முன்தினம் மும்பை மைதானத்தில் முடிவடைந்தது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்ததால் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்போடு அந்த போட்டியில் விளையாடினார்.

Rohith

- Advertisement -

இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் குவித்து அசத்த அதன்பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 67 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் எப்போதும் சிறப்பாக விளையாடமாட்டார்கள் என்று வைத்திருந்த ஒரு எழுதப்படாத ரெக்கார்டை மாற்றும் விதமாக கோலி, ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி அந்த எழுதப்படாத விதி முறையை மாற்றினார்கள் என்று கூறலாம். அதிரடியாக ஆடிய இம்மூன்று வீரர்களும் அரைசதம் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்பை இமாலய அளவிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த அசுர வேக ஆட்டம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய ரசிகர்கள் பலரும் இந்த தொடரை இழக்க விரும்ப மாட்டார்கள். இந்திய அணியின் இந்த வெற்றி எனக்கு எந்த விதத்திலும் ஆச்சரியம் அளிக்கவில்லை.

பயமற்ற இந்திய அணியின் பேட்டிங் டி20 போட்டிகளில் தற்போது தெரியவந்துள்ளது. பயமின்றி விளையாடுங்கள் ஒவ்வொருவரும் தங்களது இடத்திற்காக ஆடாமல் அணியின் வெற்றிக்கு விளையாடியதில் மகிழ்ச்சி என்றும் வாழ்த்துக்கள் டீம் இந்தியா என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கங்குலி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement