சிட்னி டெஸ்டில் இவங்க 3 பேரு ஆட்டம் டாப் லெவல். புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி – விவரம் இதோ

Ganguly

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று முடிந்தது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார்.

paine 2

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்து. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது. இறுதி நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டுடன் இணைந்து புஜாராவும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதையடுத்து இணைந்த அஸ்வின், விகாரி ஜோடி தேனீர் இடைவெளிக்கு பின் வெற்றி அடைய முடியாது என்றதால் விக்கெட்களை இழக்காமல் போட்டியை ட்ரா செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருக்கின்றனர்.

Pant

எனவே இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டத்தை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்விட் செய்திருக்கிறார்.

- Advertisement -

pujara 1

சௌரவ் கங்குலி தனது டுவிட்டரில் “ ரிஷப் பண்ட், அஸ்வின், புஜாரா ஆகியோர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை தற்போது அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 3-வது இடத்தில் களமிறங்கி (புஜாரா) சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதேபோல் 400 விக்கெட்டுகளை(ஆஸ்வின்) வீழ்த்துவது எளிது கிடையாது. இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது” என்று ட்விட் செய்துள்ளார் சௌரவ் கங்குலி.