- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு பின்னால் டிராவிட் செய்யும் இந்த வேலையால் தான் இன்னைக்கு நம்ம டீம் வெயிட்டா இருக்கு – கங்குலி

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுரவ் கங்குலி ராகுல் டிராவிட் பயிற்சியைக் குறித்து சிலவற்றை பேசியுள்ளார். இளம் வீரர்களின் அத்தனை சிறப்பான ஆட்டத்திற்கு பின்பு உள்ள முக்கிய காரணங்களையும் அவர் அப்பேட்டியில் எடுத்துக் கூறியிருக்கிறார். சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய உடனான டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா வெற்றி அடைந்தது அனைவரும் அறிவர். ஆனால் இம்முறை நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அதற்கு அடுத்த 3 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் இளம் வீரர்களின் பங்களிப்பைக் கொண்டு இந்திய அணி மிகப் பெரிய அளவில் தொடரை கைப்பற்றியது. குறிப்பாக சுப்மன் கில் ஓபன்னராக ஆக அணிக்கு பலத்தை கூட்டினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த மிகப்பெரிய பங்காக இருந்தார்.

- Advertisement -

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜும் மற்றும் ஷர்துல் தாக்குரும் இணைந்து நன்றாக பந்து வீசினார்கள் என்று கங்குலி குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் இசாந்த் சர்மா பங்கேற்கவில்லை. முக்கிய வேகப்பந்து வீச்சாளரான அவர்கள் இல்லாமல் இந்திய அணியின் இளம் வீர்களான முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூரையம் கொண்டு இந்த தொடரை வென்றது சாதாரண விஷயமல்ல என்றும் கங்குலி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பேசிய கங்குலி : தற்பொழுது ராகுல் டிராவிட் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அவரின் தலைமையின் கீழ் பல இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவரது பயிற்சியின் கீழ் வந்த வீரர்கள் தான் தற்போது இந்திய அணிக்கு மிகப் பெரிய பக்கபலமாக ஆடி வருகின்றனர்.

இனிவரும் காலங்களிலும் அவரது பயிற்சியின் கீழ் வரும் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர்கள் இந்திய அணிக்கு பல வெற்றிகளை வாங்கி தருவார்கள் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -
Published by