இந்தியா-பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் அசர வைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள கங்குலி – விவரம் இதோ

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் வங்கதேச வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஸ்டிரைக் வாபஸ் பெற்றதால் இந்த கிரிக்கெட் தொடர் தற்போது திட்டமிட்டபடி நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ யின் புதிய தலைவராக நேற்று பதவியேற்ற கங்குலி இந்த டெஸ்ட் தொடரில் புதிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

அதாவது இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி முடிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோலியுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் பகலிரவு போட்டியை நடத்துவதில் கங்குலி உறுதியாக உள்ளார்.

Nadeem

ஆனால் கோலி மற்றும் இந்திய நிர்வாகிகள் ஏற்கனவே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டாம் என்று கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான முக்கியத்துவத்தை கூறி கங்குலி இந்த கூட்டத்தில் பேச இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பிறகு பகல் இரவு போட்டி முதல் டெஸ்ட் (இந்தூர்) அல்லது இரண்டாவது டெஸ்ட் (கொல்கத்தா) ஆகிய எதாவது ஒன்றில் நிச்சயம் நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement