முற்றிய பும்ரா – டிராவிட் பிரச்சனை. அவர் மனசு வைக்காமல் உனக்கு அணியில் இடம் கிடையாது – பும்ராவை எச்சரித்த கங்குலி

Bumrah

இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் பும்ரா உடல்நலம் குணமடைந்து தகுதி பெறும் வரை தனியார் மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமித்து இருந்தார். ஆனால் பிசிசிஐ விதிப்படி காயமடைந்த இந்திய வீரர்கள் தங்களது உடற்தகுதியை தேசிய அகடெமியில் மட்டுமே முறைப்படுத்த வேண்டும்.

dravid

மேலும் காயமடைந்து பின்னர் உடற்தகுதி பெற்ற ஒவ்வொரு வீரரும் தங்கள் உடல் தகுதித் தேர்வை பெங்களூரில் உள்ள டிராவிட்டின் தலைமையில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று உடற்தகுதி நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் கடந்த புதன்கிழமை இந்த தகுதித்தேர்வு எதுவுமின்றி விசாகபட்டினம் மைதானத்தில் பும்ரா பயிற்சியில் ஈடுபட்டார்.

அதன் பிறகு பிறகும் பெங்களூர் சென்று தனது உடல் தகுதி தேர்வில் ஈடுபடவும் ஆர்வம் காட்டாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பும்ராவின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த டிராவிட் உடல் தகுதித் தேர்வுகளை நடத்த முடியாது என்று பும்ராவை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது : எனக்கு இவர்களின் விவகாரம் பற்றி தெளிவாகத் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

Bumrah

இந்திய அணியில் இடம் பிடிக்க நினைக்கும் ஒவ்வொரு வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடற் தகுதி தேர்வை நிரூபித்தால் தான் அணிக்குள் வர முடியும். அதுதான் வழிமுறை எனவே யாராக இருப்பினும் டிராவிட் தலைமையிலான தேசிய கிரிக்கெட் அகடமியில் சென்று தங்களுடைய தொகுதி நிரூபித்தால் மட்டுமே அணியில் நிச்சயம் இடம் என்றும் டிராவிட் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர் மிகச்சிறந்த வீரர் அவரின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட்டுக்கு அவசியம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -