கங்குலியின் இதயத்தில் இருந்த அடைப்புகள் எத்தனை ? திடீர் மாரடைப்புக்கு காரணம் – டாக்டர் விளக்கம்

Docter

இந்திய கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகள் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் சௌரவ் கங்குலி. இவரது காலத்தில்தான் இந்திய அணி நம்ப முடியாத வகையில் பல போட்டிகளில் வெற்றி பெற்று வெளிநாட்டிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் இன்றுவரை அவரது கேப்டன்ஷிப் மற்றும் தலைமைப்பண்பு குறித்து பேசாத ஆளில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கங்குலிக்கு ரசிகர்கள் ஏராளம் என்றால் அது மிகையல்ல.

Ganguly (2)

அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் ஐபிஎல் அணிகள் ஆடிவிட்டு தனது சொந்த மாநிலமான மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தில் ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் சௌரவ் கங்குலி. இவரது காலத்தில்தான் ஒரு சில முக்கியமான முன்னெடுப்புகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது

கடுமையான கொரோனா சூழலிலும் ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் வசித்துக்கொண்டிருந்த சௌரவ் கங்குலி அவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி.

Ganguly

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு பின்னர் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது கங்குலிக்கு சிகிச்சை கொடுத்து வரும் மருத்துவர்களில் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : சவுரவ் கங்குலிக்கு இதய நாள அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ganguly family

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் தான் அவர் இருப்பார் முழு நினைவுடன் சகல உடல் நிலையுடனும் இருக்கிறார். அவரது இதயத்தில் இரண்டு அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதற்காக அவருக்கு தற்போது சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்த மருத்துவர் அதுமட்டுமின்றி ஏற்கனவே அவரது குடும்பத்தில் சிலருக்கு இதேபோன்று இதய பிரச்சனைகள் இருந்துள்ளதால் அவருக்கும் மரபு வழியாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.