ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் இந்திய அணி பங்கேற்க உள்ள தொடர்கள் இவைகள்தான் – கங்குலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Ganguly

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே தற்போது இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை அங்கு நடைபெற இருக்கிறது.

ipl

அந்த தொடர்ந்து இந்திய அணி எந்தெந்த தொடரில் பங்கேற்கும் என்பது குறித்து தற்போது ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியினை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பி.சி.சி.ஐ நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றை “மும்பை மிரர்” என்ற நாளிதழ் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

அதில் குறிப்பிட்டதாவது : ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கு.ம் அதன் பிறகு அதன் பின்பு நாடு திரும்பும் இந்திய வீரர்கள் பிப்ரவரி மாதம் தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கின்றனர்.

IndvsAus-1

மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இப்பொழுது சீசன் இல்லை . அந்த தொடர்கள் தொடங்குவதற்கான நேரமும் இப்போது இல்லை. சூழல் எல்லாம் நமக்கு சாதகமாக அமைந்த பின்னர் உள்ளூர் கிரிக்கெட் குறித்து யோசிக்கலாம் தற்போது சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை தொகுத்துள்ளோம்.

- Advertisement -

உள்ளூர் போட்டியில் விளையாடும் வீரர்கள் தங்களது உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். உள்ளூர் போட்டிகள் துவங்குவதற்கான சரியான சாதகமான சூழ்நிலை அமைந்ததும் இதுகுறித்த விவரங்களையும் பிசிசிஐ பரிசீலிக்கும் என தகவல் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.