டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஐ.பி.எல் தொடரிலும் மாற்றத்தை கொண்டுவரும் கங்குலி – விவரம் இதோ

Ganguly

சென்ற மாதம் பி.சி.சி.ஐ – யின் புதிய தலைவராக கங்குலி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கடுத்து சில அதிரடி நடவடிக்கைகளை செய்து வந்த கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தைக் கொண்டுவர பகலிரவு போட்டியை கொல்கத்தாவில் நடத்தி அனைத்து தரப்பினரின் வரவேற்பினைப் பெற்றார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய தேர்வு குழு உறுப்பினர்களின் நீக்கி அதிரடி காட்டியுள்ள கங்குலி அடுத்து இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளிலும் தற்போது ஒரு முக்கிய மாற்றத்தை செய்ய உள்ளார். அது யாதெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி நோபால் பந்துகளை கவனிக்க தனி அவர்களை நியமிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதனை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் நோபால் கவனிக்க தனி அம்பயர்களை நியமிக்க உள்ளதாக கங்குலி தரப்பில் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு 2019 ஐபிஎல் தொடரில் மும்பை அணி நான்காவது முறையாக கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் முக்கியமான போட்டியின்போது நோபால்களில் விக்கெட் விழுந்தன ஆனால் அம்பயர்களின் கவனக்குறைவால் அந்த போட்டிகளின் முடிவுகள் மாறியது. ஒரு நோபாலால் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அணியின் கைகளிலிருந்து சூழ்நிலை காரணமாக தவறு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Umpire

இந்த காரணத்தினால் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் நோபால்களை கவனிக்கும் அம்பயர்களை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த கங்குலி திட்டமிட்டிருப்பதாகவும் அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தவுள்ளதா தெரிகிறது. இதனால் இதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்களை செய்துவரும் கங்குலி ஐபிஎல் தொடரிலும் கால் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -