இந்தியாவில் எப்போது கிரிக்கெட் ? கங்குலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – யாரும் இந்த முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

Ganguly
- Advertisement -

சீனாவில் உருவான கரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுவதும் பேரழிவுகள் உண்டாகி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நிலையும் சீர்குலைந்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரும் சேதத்தை கண்டுள்ளன. உலக அளவில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Ind

- Advertisement -

இந்தியாவிலும் தற்போது படிப்படியாக பரவிவரும் கொரோனா வைரசுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் 625 பேர் பலியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளும், கூட்டங்கள் மற்றும் அரசாங்க நிகழ்ச்சிகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் தொடர், இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் என எந்தவித விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படாமல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3க்கு பிறகும் மக்கள் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு விட முடியாது.

IND-2

அது மட்டுமில்லாமல் கொரோனா வைரஸில் இருந்து முழுவதும் மீண்டு வந்தாலும் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு மக்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இதனால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடே பெரும் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் இந்தியா இயல்பு நிலையை திரும்புவது சற்று கடினம் தான் என்றும் அதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்பதும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் எப்போது இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்று கிரிக்கெட் குறித்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது : தற்போது நாம் உள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் குறித்து யோசித்து கூட பார்க்க கூடாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் : மக்களின் நலனும், மக்களின் ஆரோக்கியம் தான் நமக்கு முக்கியம், அதை தான் நாம் இப்போது உற்று நோக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவில் எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படமாட்டாது. மனித உயிர்கள் தான் தற்போதைக்கு முக்கியம் அதுதவிர கிரிக்கெட் போட்டிகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாது என்று கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement