நாங்க விளையாடுற காலத்துல இந்த ரூல்ஸ் மட்டும் இருந்திருந்தா இன்னும் 4000 ரன்கள் அடிச்சிருப்போம் – சச்சினுக்கு பதிலளித்த கங்குலி

Sachin

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களாக இருந்தவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி. இருவருமே இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்கள். இதில் குறிப்பாக சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து ஒரு மிகச் சிறந்த அணியை உருவாக்கி தந்து விட்டு சென்றார்.

sachin ganguly 2

இருவரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். துவக்க வீரர்களாக இருவரும் ஆடினால் இவர்களது காலகட்டத்தின் பந்துவீச்சாளர்கள் இவர்களுக்கு பந்துவீசவே அஞ்சுவார்கள். இருவரும் 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8227 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த இரண்டு ஜாம்பவான்களையும் ஜோடியாக சேர்த்து ஒரு பாராட்டு மழையை பொழிந்து இருந்தது.

அதில் வேறு எந்த ஒரு கிரிக்கெட் ஜோடியும் இவ்வளவு ரன்கள் சேர்த்தது இல்லை எனவும் வேறு எந்த ஒரு ஜோடியும் 6000 ரன்கள் கூட கண்டதில்லை எனவும் பதிவிட்டு இருந்தது. இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் எங்களுக்கு இது மிகச்சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளது. வட்டத்திற்கு உள்ளே நான்கு பீல்டர்கள் மற்றும் இரண்டு புதிய பந்துகள் என்னும் இந்த புதிய விதிகள் எங்களது காலகட்டத்தில் இருந்தால் எவ்வளவு ரன்களை சேர்த்து இருப்போம்? என்று நீங்கள் கூறுங்கள் கங்குலி என்று அவரை ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார்.

Ganguly2

இதற்கு உடனடியாக பதில் அளித்து இருந்த சவுரவ் கங்குலி இன்னும் ஒரு 4000 ரன்கள் அல்லது அதற்கும் அதிகமாக அடித்து இருப்போம். மேலும், இரண்டு புதிய பந்துகள் என்னை அலாதியாக ஆக்குகின்றன. இப்படி இருந்திருந்தால் அடுத்த 50 ஓவர்களுக்கு கவர் திசையில் பவுண்டரி பறந்து இருக்கும் என்று பதிவிட்டிருந்தார் சௌரவ் கங்குலி.

- Advertisement -

தற்போது உள்ள விதிமுறைப்படி 3 பவர்பிளே முறை உள்ளது அதற்கு ஏற்றாற்போல் பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் நிறுத்தப்படுவார்கள். ஆனால் கங்குலி மற்றும் சச்சின் ஆகியோர் விளையாடிய காலத்தில் இதுபோன்ற விதிமுறைகள் கிடையாது. இருப்பினும் இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி பவுண்டரி அடிக்கும் திறமை படைத்தவர்கள்.

அதுமட்டுமின்றி உள்ள விதிமுறைப்படி 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. புது பதில் எளிதாக பவுண்டரிகளும் கிடைக்கும், விக்கெட்டும் விழும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இவர்கள் இருவருமே சிறந்த துவக்க ஜோடி என்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.