பாராட்டுக்கள் மட்டுமின்றி பரிசுத்தொகையும் அறிவித்து கெத்து காட்டிய கங்குலி – இவர்தான் உண்மையான லீடர்

Ganguly
- Advertisement -

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய நாட்டின் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தற்போது அனைத்து துறைகளிலும் விளையாடி வருகின்றனர். இதில் இந்திய அணிக்கு நாட்டிற்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் மற்றும் பரிசுத் தொகைகள் ஆகியவை குவிந்து வருகின்றன.

olympic

- Advertisement -

இந்தியா சார்பாக முதலில் பளுதூக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), அதன் பின்னர் பேட்மிண்டனில் பிவி சிந்து (வெண்கலம்), பெண்களுக்கான பாக்சிங் போட்டியில் லவ்லினா (வெண்கலம்), ஆண்கள் மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா (வெள்ளி), மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா (வெண்கலம்), இறுதியாக நேற்று ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது பல இந்தியர்களின் கனவாக இருக்கும் வேளையில் அதனை சாதித்துக் காட்டிய இந்த வீரர் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு மட்டுமின்றி அந்தந்த வீரர்களை சார்ந்த மாநில அரசுகளும் ஏகப்பட்ட பரிசுகளை அளித்து அவர்களை கௌரவப்படுத்தி வருகின்றன.

Meera

அந்த வகையில் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இவர்களுக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தது மட்டுமின்றி பரிசுத் தொகையையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள் மட்டுமின்றி பரிசுத் தொகையும் அறிவித்திருக்கின்றோம்.

neeraj 2

அதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடியும், வெள்ளி வென்றவர்களுக்கு 50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு 25 லட்சமும், ஹாக்கி அணிக்கு ஒன்றரை கோடி பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. மேலும் இனி பரிசு வெல்லப்போகும் அனைவருக்கும் இதே அடிப்படையில் பரிசுத் தொகை கிடைக்கும் என பிசிசிஐ சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement